விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  காசின்வாய்க்கரம்விற்கிலும்*  கரவாதுமாற்றுஇலிசோறுஇட்டு* 
  தேசவார்த்தைபடைக்கும்*  வண்கையினார்கள்வாழ்திருக்கோட்டியூர்க்*
  கேசவா! புருடோத்தமா!*  கிளர்சோதியாய்! குறளா! என்று* 
  பேசுவார்அடியார்கள்*  எம்தம்மைவிற்கவும்பெறுவார்களே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

காசின் வாய் - ஒருகாசுக்கு
கரம் - ஒருபிடிநெல்
விற்கிலும் - விற்கும்படியான துர்ப்பிக்ஷகாலத்திலும்
சோறு இட்டு - (அதிதிகளுக்கு) அன்னமளித்து
தேச வார்த்தை - புகழ்ச்சியான வார்த்தைகளை

விளக்க உரை

இப்பாசுரமடியாகப் பிறந்தவையென்றுணர்க:- ஒருகாசுக்கு ஒருபிடிநெல் விற்கும் படியான காலத்தில் தம்வயிற்றைத் தாம் நிறைத்துக்கொள்வதே அரிது; தம்வயிற்றைப்பட்டினிகொண்டு பிறர்வயிற்றை நிறைப்பதென்றால் ஏதேனுமொரு ப்ரத்யுபகாரத்தைக் கணிசித்தாராகவேணும்; இது உலகத்தில் ஸாமந்ய ஜநங்களின் இயல்பு; திருக்கோட்டியூரி லெழுந்தருளியிருக்கும் ஸ்வாமினோவென்றால், சாகின்வாய்க்காமலிற்குங்காலத்திலும், கைம்மாறுகருதாழ அதிதிகளுக்கு அந்ததாநம்பண்ணி நாடெங்கும் புகழ்பெற்றிருப்பார்களாம். அப்படிப் பட்ட மஹாநுபாவர் வாழுமிடத்துள்ள எம்பெருமானது திருநாமங்களை அநுஸந்திக்குமவர்கள் அடியேனைத் தங்களிஷ்டப்படி உபயோகப்படுத்திக்கொள்ளுமாறு யான் உடன்பட்டிருக்கத் தட்டில்லையென்று- தம்முடைய சரமபர்வ நிஷ்ட்டையின் பரமகாஷ்ட்மடையை அருளிச் செய்தவாறு.

English Translation

Even when a fistful of grain sells for a sovereign coin during famine the residents of Tirukkottiyur, well known for the generosity, feed guests without hiding their stock, chanting “Kesava”, “Purushottama”, “Radiant Lord” and “Manikin Lord” and expect nothing in return. Their servants have the right to sell us as bonded serfs.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்