விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பண்டைநாளாலே நின்திருஅருளும்*  பங்கயத்தாள் திருஅருளும்
    கொண்டு* நின்கோயில் சீய்த்து பல்படிகால்*  குடிகுடிவழிவந்து ஆட்செய்யும்* 
    தொண்டரோர்க்குஅருளி சோதிவாய்திறந்து*  உன்தாமரைக்கண்களால் நோக்காய்* 
    தெண்திரைப் பொருநல் தண்பணைசூழ்ந்த*  திருப்புளிங்குடிக் கிடந்தானே!  (2)  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தெண் திரை பொருநல் – தெளிந்த அலைகளையுடைத்தான தாமிரபர்ணியோடு சேர்ந்த
தண் பணை சூழ்ந்த – அழகிய சீர்நிலங்களால் குழப்பட்ட
திருப்புளிங்குடி – திருப்புளிங்குடி யென்கிற திருப்பதியிலே
கிடந்தானே – சயனித்தருள்பவனே!
நின் திரு அருளும் – உனது க்ருபையையும்

விளக்க உரை

நின் கோயில் சீய்த்து–திவ்ய தேசங்களிலே பண்ணுங் கைங்கரியங்களில் தலையானது இது. *வயலணியனந்தபுரம் கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை களையலாமே* என்று மேலுமருளிச் செய்வர். திருவலகிடுதல் மெழுகுதல் கோலமிடுதல் முதலிய செய்கைக்குக் கோயில் சீய்க்கை யென்று பெயர். இங்கே ஈட்டில் திருக்கண்ணமங்கையாண்டானிதிஹாஸ் மொன்றுளது; அவரைப் பற்றி ஸ்ரீவசநபூஷணத்தில் "திருக்கண்ண மங்கையாண்டான ஸ்வவ்யாபாரத்தை விட்டான்" என்றருளிச் செய்யப் பட்டிருக்கின்றதன்றோ. அப்படிப்பட்டவவர் அவ்வூரில் ஒரு மகிழ மரத்தடியிலேயிருந்து திருவலகிடா நிற்கையில் உண்மையுணர்ச்சியற்ற வொருவன் 'எம்பெருமானே உபாயமென்றிருக்கிற அநந்ய ப்ரயோஜநர் இங்ஙனே கிலேசப்படுவது எதற்கா–' என்றானும்; அப்போது திருவலகிட்ட விடத்தையும் இடாத விடத்தையுங் காட்டி 'இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே இதற்கொரு பலமில்லை யென்று தோற்றியிருந்ததோ?' என்று பணித்தாராம் திருக்கண்ண மங்கையாண்டான். இங்கு அறிய வேண்டுவதாவது;–த்ருஷ்டப்ரயோஜந மென்றும் அத்ருஷ்ட ப்ரயோஜநமென்றும் ப்ரயோஜந மிருவகைப்படும். அத்ருஷ்ட ப்ரயோஜகத்திற்கொரு ஸாத்நாநூஷ்டாநம் பண்ணுமையே அநந்ய ப்ரயோஜநர்க்குற்றது. ஸன்னிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு ப்ரயோஜநாபேசைஷயின்றிக்கே செய்வதனால் ஒரு குறையுமில்லை; இது நிஷ்ப்ரயோஜநந்தானே யென்ன வேண்டா; திருவலகிடாதவிடம் கண்கொண்டு காண வொண்ணாதாயும், திருவலகிட்டவிடம் கண்ணுற்கான வினிதாயுமிருப்பதே ப்ரயோஜனம். இது அநந்ய ப்ரயோஜநத்வத்திற்கு விரோதியன்று என்பதாம். பல்படிகால் என்பதனால் வம்ச பரம்பரையாக இங்ஙனே கைங்கரியஞ்செய்யும் ஸந்தான மென்கிறது. தொண்டனேற்கு என்று ஒருமையாகச் சொல்லாமல் 'தொண்டரோர்க்கு' என்று பன்மையாகச் சொன்னது அநுபந்திகளையுங் கூட்டிக் கொண்டு சொன்னபடி. சோதிவாய் திறந்து பூவலருமாபோலே வாய்திறந்தொரு வார்த்தை யருளிச் செய்யவேணும். வாய் திறக்கும் போது திருமுகத்தில் பிறக்கும் செவ்விளையும் அதுபயிக்க வேண்டிச் 'சோதிவாய்' என்கிறார். இங்கே ஈடு :– "*மாம் அக்ரூரேதி வசஷ்யதி*" யென்று வார்த்தையனவிலேயிற்கு அக்ரூரன் அநுபதித்தது தத்காலத்தில் திருமுகத்திற் செவ்வியும் உத்தேச்யமாயிருக்கிறதாயிற்று இவர்க்கு. உன் தாமரைக் கண்களால் நோக்காய்–வார்த்தையில் தோற்றாத பந்தமும் நோக்கிலே தெரியும்படி குளிர நோக்கியருளவேணுமென்கை. கோயிலில் பிள்ளை தேவப்பெருமாளரையா இப்பாட்டை ஸேவிக்கையில் *உன் தாமரைக் கண்களால் நோக்காய்* என்று ஒருவிசை சொல்லி நிறுத்தாதே 'நோக்காய் நோக்காய் நோக்காய்' என்று பலகாலும் ஒருவிசை கொண்டிருந்து மேலடியில் போகமாட்டாதே நின்றாராம் ; அப்போது கோஷ்டியில் வீற்றிருந்து அவரது திருத்தகப்பனாரான ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் எழுந்திருந்து 'பிள்ளாய்! நீ எம்பெருமான் திருவுள்ளம் புண்டும்படி இங்ஙனே பலகாலும் சொல்லி நிப் பத்திக்கலாமோ? அழகிய மீற்றைத் தந்து நல்ல பாட்டைத் தந்து ஐச்வர்ய ஸந்தானங்களையும் தந்தருளியிருக்க ஒன்றும் செய்யாதாராக நினைத்து இன்னமும் நோக்காய் நோக்காய் நோக்கயென்றால் இது என்னே! மேலே பாடு என்றாராம்.

English Translation

O Lord reclining in Tiruppulingudi surrounded by surging Parunal waters, Pray look at us with your lotus eyes, and part your silent lips. From the days of yore, through your grace and the lotus-lady's grace, we have thronged your temple and served you in many ways as bonded serfs

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்