விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கருமாணிக்க மலைமேல்*  மணித்தடம் தாமரைக் காடுகள்போல்* 
    திருமார்வு வாய்கண்கை*  உந்திகால்உடை  ஆடைகள் செய்யபிரான்*
    திருமால் எம்மான் செழுநீர்வயல்*  குட்டநாட்டுத் திருப்புலியூர்* 
    அருமாயன் பேர்அன்றிப் பேச்சுஇலள்*  அன்னைமீர்!  இதற்கு என்செய்கேனோ.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

திருமால் எம்மான் - திருமகள் கொழுநனான வழியாலே எனக்கு நாயகனாய்,
செழு நீர் வயல் - செழிந்த நீர் நிறைந்த வயலையுடைய
குட்டநாடு திருபுலியூர் - குட்டநாட்டுத் திருப்புலியில் எழுந்தருளியிருப்பவனான
அரு மாயன் - பெறுதற்கரிய ஆச்சரிய பூதனுடைய
பேர் அன்றி பேச்சு இலள் - திருநாமப்பேச் சொழிய வேறொரு பேச்சு மறியாள் (இத்தலைவி)

விளக்க உரை

திருப்புலியூர்ப் பெருமானுடைய திவ்யாவயவஸௌந்தரியத்தைக் கண்டு, அவ்வடிவழகல்லது மற்றொன்று அறியாதபடி யீடுபட்டாள் இத்தலைவி –என்று தோழியானவள் தாய்மார்க்கு உரைக்கின்றாள். எம்பெருமானது எழில்நிலமேனியிலே திருமார்வு திருவதரம் திருக்கண்கள் திருக்கைகள் திருவடிகள் முதலானவை சிவந்து விளங்கா நின்றபடியைப் பார்த்தால் ஒரு கருமாணிக்கமலையிலே விசாலமான தாமரைக்காடுகள் பூத்தனவோ! என்னலாம்படி யுள்ளதாம். மாணிக்கம் சிவந்ததுயொழியக் கறுதத்தன்று, இங்குக் கருமாணிக்கமென்பது இல்பொருளுவமை (அபூதோபமை) பரியமாணிக்கக் குன்று ஒன்றுண்டாகி அதன்மேலே தாமரைக் காடுகள் பூக்கப்பெற்றால் அதனை உவமை கூறலாமென்றவாறு. * அரைச்சிவந்த வாடையும் தாமரைமலர்ந்ததாக வருணிக்கப்பட்டதிங்கு. பிரான் என்றது –இவையெல்லாம் காட்டிலெறிந்த நிலாவாகாமே பக்தர்களுக்கு அநுபவிக்கக் கொடுக்குமவனென்கை. அப்படி பக்தர்களனுபவிக்கக் கொடுப்பதற்குக் காரணம் பிராட்டியின் உபதேசமே யென்பது தோன்ற உடனே திருமால் என்றது. குட்டநாட்டுத் திருப்புலியாருமாயன் பேரன்றிப் பேச்சிலன் –பரவ்யூஹ விபவங்களுக்குரிய திருநாமங்களைச் சொல்லுஐகயன்றிக்கே அத்தலத்தெம்பெருமானுடைய திருநாமங்களையே வாய்வெருவா நின்றாள். மலைநாட்டுத் திருப்பதிகள் பதின்மூன்றனுள் இத்திருப்பதியுமொன்று. சோழநாட்டுச் சிறுபுலியூரிற்காட்டில் வாசி தோன்றக் குட்டநாட்டுத் திருப்புலியூரென்றது. அன்னைமீரிதற்கென் செய்கேனென்றது தோழிதனக்கும் இப்போதே தெரிந்தமை காட்டிற்றாகும்.

English Translation

My ladies! What can I do? She utters not a word, save the names of the sweet Lord of kuttanattu Tiruppullyur, who stands like a gem mountain with ponds. His chest, lips, eyes, navel, hands, feet and vestment are like lotus thickets on it

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்