விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கூடிற்றாகில் நல்உறைப்பு*   கூடாமையைக் கூடினால்* 
    ஆடல் பறவை உயர்கொடி*  எம்மாயன் ஆவதது அதுவே*
    வீடைப் பண்ணி ஒருபரிசே*  எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய்* 
    ஓடித் திரியும் யோகிகளும்*  உளரும்இல்லை அல்லரே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஒரு பரிசே விடை பண்ணி - தங்கள் மனம்போனவொரு விதமாகவே மோக்ஷ வஸ்துவைக் கல்பிப்பார்
எதிர்வும் நிகழ்வும் கழிவும் ஆய் - முக்காலத்து முள்ளாராய்
ஒடி திரியும் - ஸம்ஸார பதவியிலேயே உழன்று கொண்டிருப்பாராய்
யோகிகளும் - (குத்ருஷ்டிகளான) சில மஹாநுபாவர்ளும்
உளர், இல்லை அல்லர் - இருக்கிறார்களே யொழிய இல்லாமற் போகவில்லை.

விளக்க உரை

கூடிற்றாகில் நல்லுறைப்பு –நித்ய ஸம்ஸாரியான ஜீவஸ்வரூபம் பரமவிலக்ஷண ப்ரஹ்ம ஸ்வரூபமாகக் கூடுமாகில் இது பெறாப் பேறன்றோ என்றபடி. ஆனால் இது ஸம்பாவிதமன்றே என்பதை உடனேயருளிச் செய்கிறார் கூடாமையைக் கூடினா லென்று தொடங்கி “கூடாமையை“ என்ற விடத்திலுள்ள ஐகாரம் சாரியை, கூடாமை கூடினால் என்றதாகக் கொள்க. முயற்கொம்பு, ஆகாசத் தாமரை, மலடிமகன் என்று சொல்லுகிறவிவை கூடினால் என்றபடி. உலகில் அஸங்கதங்களானவை ஸங்கதமாகக் கூடுமானால், ஆடல்பறவையுயர் கொடியெம்மாயனாவது –ஜீவாத்மா பரமாத்மாவாக ஆய்விடமுடியும். இந்த ஸம்ஸாரி சேதநனே பரப்ரஹ்ம்மாக ஆய்விடுகிறபக்ஷத்தில் எம்பெருமானுக்குள்ளதான கருடவாஹனத்வமும் இவனுக்கு ஸம்பவிக்க வேண்டியதாகுமன்றோ, இது ஸம்பாவிதமாகுமோ? இதை ஆலோசிக்கலாமே – என்கைக்காக ஆடல்பறவை யென்றிட்டது. ஜீவாத்மபரமாத்மாக்களுக்கு பேதமேயொழிய ஐக்கியம் ஒருநாளும் ஸம்பவியாதென்பதை நிகமித்தருளுகிறார் அது அதுவேயென்று. அவ்வஸ்து அவ்வஸ்துவே யென்றபடி. ஜீவன் ஜீவனேயென்க. இனிப் பின்னடிகளாலருளிச் செய்வதாவது, இப்படி அஸம்பாவிதமானதைச் சொல்லுவார் சிலருளரோவென்ன, அப்படிப்பட்ட மஹானுபாவர்களும் எக்காலத்திலும் இருக்கின்றார்களே, இல்லாமற்போகவில்லையேயென்று. (வீடைப்பண்ணி ஒருபரிசே) “ஒருபரசே அவித்யா நிவ்ருத்தியே மோக்ஷமெனறு ஒனறைக்கட்டியென்கை. ஒரு பரிசே யென்றது ஸ்வக போலகல்பனையான ஒரு ப்ரகாரமாய் என்றவாறு ஒன்றைக்கட்டியென்க. ஒரு பரிசே யென்றது ஸ்வக போலகல்பனையான ஒரு ப்ரகாரமாய் என்றவாறு. எதிர்வும் நிகழ்வும் கழிவுமாய் – முக்காலத்துமுள்ளவர்களாய். ஓடித்திரியும் யோகிகளுமுளர் –ஜன்ன மரண சக்ரத்திலேயே கிடந்து ஒடித்திரியும் குத்ருஷ்டிகளாகிற மஹானுபாவர்களும் உண்டாயிருக்கிறார்களே, இல்லையல்லரே – இல்லாமையில்லையே, இங்கே ஈடு, “காலம் அநாதி, பண்ணிவைக்கும் பாபங்களுக்கு எல்லையில்லை, இப்படியிருப்பார் சிலமஹாபுருஷர்கள் உண்டாக்கக் கூடாதோ? ஸம்ஸாரத்தில் கூடாத்துண்டோ? இங்கு யோகிகளென்றது உண்மையான யோகிகளைச் சொன்னபடியன்று, க்ஷேபித்துச் சொல்லுகிறபடி, எதிர்மறையிலக்கணை. யோகிகளுமென்ற விடத்து, உம்மை –இதை நிறை. வீட்டை என்றிருக்கவேண்டுவது வீடை என்றிருப்பது எதுகைநயம்பற்றி.

English Translation

"Tis well that we join him then; but till such time as that, the Garuda-banner Lord is Lord and soul is soul, so mind! 'Tis not hard to see men wandering in self-made heavens. Such Yogis are galore on Earth, they have been and will be!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்