விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கண்கள் சிவந்து பெரியவாய்*  வாயும் சிவந்து கனிந்து*  உள்ளே 
    வெண்பல் இலகு சுடர்இலகு*  விலகு மகர குண்டலத்தன்*
    கொண்டல் வண்ணன் சுடர்முடியன்*  நான்கு தோளன் குனிசார்ங்கன்* 
    ஒண் சங்கதை வாள்ஆழியான்*  ஒருவன் அடியேன் உள்ளானே.  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

இலகு விலகு மகர குண்டலத்தன் - மிக விளங்கி அசைகிற மகரகுண்டலங்களையுமுடையனாய்
கொண்டால் வண்ணன் - காள மேக நிறத்தனாய்
சுடர் முடியன் - ஒளிமிக்க திருவபிஷேகத்தையுடையனாய்
நான்கு தோளன் - திருத்தோள்கள் நான்குமுடையனாய்
குனி சார்ங்கன் - வளைந்த சார்ங்கவில்லையுடையனாய்

விளக்க உரை

எம்பெருமான் ஆழ்வாரோடு கலந்ததனால் தனக்குப் புதுக்கணித்த திவ்ய ஸௌந்தர்யத்தைக் காட்டக்கண்டு அநுபவித்து ஆனந்தம் பொங்கிப் பேசுகிற பாசுரமிது. கண்கள் சிவந்து என்றது எம்பெருமானது இயற்யான கண்ணழகைக் சொல்லுகிறபடியன்று, * மாயக்கூத்தன் பதிகத்தில் * கண்ணும் வாயும் துவர்ந்தடியேன் * என்று, ஆழ்வார் வைவர்ணிய மடைந்திருந்தபடிக்கேற்ப எம்பெருமானும் வைவர்யியமடைந்திருந்து, பிறகு * இருத்தும் வியந்து பதிகத்தில் ஆழ்வார் ஆனந்த மிகுதியினால் வைவர்ணியம் நீங்கித் தன்னிறம்பெற எம்பெருமான்றானும் தன்னிறம் பெற்றபடி சொல்லுகிறது. ஆசார்யஹ்ருதயத்தில் (58) “மூவாறு மாஸம் மோஹித்து“ என்றவிடத்து வியாக்கியானத்தில் –“*மாயக்கூத்தனில் தாம் கண்ணும் வாயும் துவர்ந்தாப்போலே தம்மைப் பிரிகையாலே அவன் கண்ணும் வாயும் துவர்ந்து, தம்மோடு கலந்தபின்பு அவை தன்னிறம் பெற்றபயை யநுஸந்தித்து “ஈதென்னப்ரகாரம்!“ என்று ஆறு மனம் மோஹித்து“ என்று மணவாளமாமுனிகள் அருளிச் செய்துள ஸ்ரீஸூக்தி இங்கே அநுஸந்திக்கத்தக்கது. (பெரியவாய்) பெரிய ஆய் என்று பிரிக்க. திருக்கண்கள் தன்னிறம் பெற்றவளவேயல்லாம் பெருமையும் பெற்றனவாம். இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின் –“*ஸதைகரூபரூபாய என்கிறது கர்ம நிபந்தனமான விகாரங்களில்லையென்ற வித்தனையொழிய, ஆச்ரித ஸம்ச்லேஷத்தாலே பிறகும் விகாரமில்லையென்கிறதன்றே.“ வாயும் சிவந்துகனிந்து –திருக்கண்களேயன்றிக்கே திருவதரமும் தன்னிறம் பெற்றபடி சொல்லுகிறது. உள்ளே வெண்பலிலகுசுடர் –திருவதரத்தில் சிவப்புக்குப் பரபாகசோபையான வெண்ணிறமுடைய திருமுத்துக்களிருக்கிறபடி. இலகுவிலகு மகரகுண்டலத்தன் - திருக்குழலில் இருட்சிக்கு ப்ரகரசமாய் அலைந்துவருகிற திருமகரகுண்டலங்கள் விளஙகுகிறபடி. கொண்டல்வண்ணன் –கார்காலத்துக் காளமேகம்போலே வடிவும் குளிர்ந்து கருமைபெற்றது. இதற்கு முன்பு ஆழ்வாருடம்பு வெளுத்திருந்தாப்போலே இவ்வடிவம் வெளுத்திருந்ததாகவேணும். சுடர் முடியன் – தன்னழகாலே எல்லாவழகுகளையும் முட்டாக்கிடவில்ல “திருவபிஷேகத்தையுடையவன். ஆழ்வார் * மாயக்கூத்தனில் பட்டவிடாய் தீர்ந்தபின்பே எம்பெருமான் திருமுடியில் திருவபிஷேகம் தரிப்புப்பெற்றதாயிற்று. * மாயக்கூத்தனில் * முடிசேர் சென்னியம்மா * என்று ஆழ்வார் கதறினது எம்பெருமான் திருவுள்ளத்தில் பட்டிருந்ததுபோலும். நான்கு தோளன் – ஆழ்வாரை யணையப்பெற்றபின் திருத்தோள்களும் பவித்துப் பேசுகிறார், இவற்றை ஆயுதமாக நினையாதே ஆபணங்களாகவே திருவுள்ளம்பற்றி யிருக்கிறபடி. ஆக இப்படிப்பட்ட எம்பெருமானுடைய வாசாமகோசரமான வைலாக்ஷண்யக்கை நோக்கி ஒருவன் என்கிறார்.

English Translation

Someone stands within me with large red eyes and ripe coral lips, pearly white teeth and radiant dangling earnings shaped like Makara-fish. Dark as the rain-cloud, he wears a radiant crown, has four arms, and holds a beautiful bow, discus, conch, mace

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்