விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    செவ்வாய்உந்தி*  வெண்பல் சுடர்க்குழை தம்மோடு* 
    எவ்வாய்ச் சுடரும்*  தம்மில்முன்வளாய்க் கொள்ள*
    செவ்வாய் முறுவலோடு*  எனதுஉள்ளத்துஇருந்த* 
    அவ்வாயன்றி*  யான் அறியேன் மற்றுஅருளே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எவ்வாய் சுடரும் - மற்றெல்லா அவயவங்களின் தேஜஸ்ஸும்
தம்மில் முன்வளாய்க் கொள்ள - ஒன்றுக் கொன்ன முற்பட்டுச் சூழ்ந்துகொள்ள
செம் வாய் முறுவரோடு - சிவந்த திருப்ப வளத்தின் முறுவலோடே கூட
எனது உள்ளத்து இருந்த - என்னெஞ்சினுள்ளே யிருக்கின்ற
அவ்வாய் அன்றி - அவ்வித மொழுய

விளக்க உரை

எம்பெருமான் ஆழ்வாரோடே கலந்து முறுவல் செய்து நிற்க, அத்திருப்பவளத்திலழகையனுபவித்துப் பேசுகிறார் இவ்வழகோடே என்னுள்ளே முறுவல் செய்திருக்கிறவிருப்பொழிய வேறொன்றையும் அறிகின்றிலேனென்கிறார். சிவந்த திருவதரமும் சிவந்த திருவுந்தியம் வெளுத்த திருமுத்தும் திருமகரக்குழையுமாகிற இவற்றோடே கூட மற்றைத் திவ்யாவயவ தேஜஸ்ஸும் ஒன்றுக்கொன்று முற்கோலிவந்து என்னை வளைத்துக்கொள்ள, இங்ஙனே பலபல அவயவங்களின் அழகு வில்வீசினாலும் என்னை நோக்கி அவன் முறுவல் செய்கையாகிறவிதொன்றே என்னுள்ளத்தை ஆகர்ஷியா நின்றது. என்றாராயிற்று.

English Translation

He stands before me with lotus navel, coral lips and pearl-white teeth, wearing radiant ear- rings, He is of exceeding effulgence, - Oh, with a smile I could embrace! He stays in my heart, I do not know a greater grace

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்