விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயமயக்கு மயக்கான்*  என்னை வஞ்சித்து* 
    ஆயன் அமரர்க்கு*  அரிஏறு எனதுஅம்மான்*     
    தூய சுடர்ச்சோதி*  தனதுஎன்னுள் வைத்தான்* 
    தேசம் திகழும்*  தன்திருவருள் செய்தே.      

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எனது அம்மான் - எம்பெருமான்
தேசம் திகழும் தன்திரு அருள் செய்து - தேசப்ரஸித்த மாம்படியான தன் அஸாதாரண க்ருபையைப்பண்ணி
தனது தூய சுடர் சோதி - தன்னுடைய நிர்மல தேஜோமய திவ்யமங்கள விக்ரஹத்தை
என் உள் வைத்தான் - எனது நெஞ்சினுள்ளே ஸுப்ரதிஷ்டிதமாக்கினான், (இது மெய்யேயாதலால்)
என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான் - என்னிடத்தில் வஞ்சகனாய் ப்ரமிக்கச்செய்கிறானல்லன்

விளக்க உரை

மருள்தானீதோ மாயமயக்கு மயக்கே* என்றாரே, ஆராய்ந்து பார்த்து இது மருளன்று, மயக்கன்று மெய்யாகவே அவனென்னுள்ளே கலந்து களிப்புற்றான், இதிலொரு ஸந்தேஹமில்லையென்கிறார். ஆறாயிரப்படி யருளிச் செயல் காண்மின், -“நிரவதிக வாத்ஸல்ய ஸௌசீல்யத்தை யுடையனாயிருந்தவனே என்னுடைய நிகர்ஷத்தைப் பார்த்து என்று திறத்துப் பொய் செய்தருளான், ஹேய ப்ரத்யநீகமான தன் திருவடிவை என்னுள்ளே ஸர்வலோகமு மறியும்படி மெய்யே வைத்தருளினானென்கிறார்.“ ஆயன் அமரர்கரியேறு எனதம்மான் தேசந்திகழும் தன் திருவருள் செய்து தனது தூயசுடர்ச்சோதி என்னுள் வைத்தான், என்னை வஞ்சித்து மாயமயக்கு மயக்கான் – என்று அந்வயக்ரமம். அநாச்ரிதரான துர்யோதநாதிகள் திறத்திலே ஆயுதமெடேனென்று ஆயுதமெடுத்தும் பகலை யிரவாக்கியும் வஞ்சித் தானித்தனையல்லது பாண்டவர்கள் விஷயத்தில் அத்தைச் செய்தானோ? தனக்கே அற்றுத்தீர்ந்த என்னை வஞ்சிப்பனோ? ப்ரமஸாதனங்களாலே ப்ரமிக்கச் செய்வனோவென்னை? வஞ்சித்தானுமல்லன், ப்ரமிக்கச் செய்தானுமல்லன். வஞ்சிக்கமாட்டானென்பதற்கு ஹேது சொல்லுகிறார் ஆயனமரர்க்கரியேறு எனதம்மான் என்று. இப்படிப்பட்டவன் லோகமெல்லாமறியும்படி என் பக்கலிலே நிர்ஹேதுக க்ருபையைப்பண்ணி, ஹேயப்ரதிபடமாய் விலக்ஷண தேஜோரூபமாய் சுத்த ஸத்வமயமாய் தனக்கே அஸாதாரணமான வடிவை என்னுள்ளே வைத்தான், இது மெய்யே, வஞ்சனையன்று மருளன்று.

English Translation

Gopala my Lord is the lion of the celestials. He shall deceive me no more with his tricks. He placed his pure radiance within me. His grace shines m all the worlds!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்