விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இருந்தான் கண்டுகொண்டு*  எனதுஏழை நெஞ்சுஆளும்* 
    திருந்தாத ஓர்ஐவரைத்*  தேய்ந்துஅறமன்னி*
    பெரும்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த பெருமான்* 
    தரும்தான் அருள்தான்*  இனியான் அறியேனே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேய்ந்து அறமன்னி - க்ஷயித்து முடியும் படியாக என்பால் பொருந்தியிருந்து
கண்டு கொண்டு இருந்தான் - (நிதியெடுத்தவன் நிதினய்யே கண்டு கொண்டிருக்குமா போலே) என்னையே கண்டு கொண்டிருக்கின்றான்.
பெரு தாள் களிற்றுக்கு அருள் செய்த பெருமான்தான் - பெரிய தாளையுடைய யானைக்கு அருள் செய்து ஸர்வாதிகனானவ்வன்
தரும் அருள் தான் - அந்த யானைக்கத் தந்த வருளை
இனி யான் அறியேன் - என்பக்கல் பண்ணின வருளைக்கண்ட பின்பு அருளாக மதிக்கின்றிலேன்.

விளக்க உரை

பிரபல விரோதிகளான இந்திரியங்கள் வலிமாண்டொழியும்படி தன்னழகாலே செய்து என்னை விஷயீகரித்தருளின பேருதவிக்கு, கஜேந்திராழ்வான் திறந்துச் செய்த உதவியும் ஒவ்வாதென்கிறார். “இருந்தான் கண்டு கொண்டே“ என்று கீழ்ப்பாட்டிலுஞ் சொல்லிற்று, இப்போது மறுபடியும் அது சொல்லுகிறது. அந்தாதித் தொடைக்காகவன்று, ஜன்மதிரித்ரன் நிதிகண்டால் கண்ணிமைத்தலின்றியே பார்த்துக் கொண்டிருக்குமாபோலே பார்த்தபடியே யிராநின்றானென்கிறது. இராமபிரானும் ஸுக்ரீவனும் நட்பான பின்பு * அந்யோந்யமபிவீக்ஷந்தௌ ந த்ருப்தி முபஜக்மது * (ஒருவரையொருவர் கண் கொட்டாமல் பார்த்தபடியேயிருந்து த்ருப்தியடையாமலே யிருந்தார்கள்) என்று சொல்லிற்று, இருவருமாக்க் கண்டு கொண்டிருந்தபடி அங்கு, ஒரு தலையேயிங்கு. அவனாலே தாமடைந்த வுதவியாதெனில், (எனதேழை நெஞ்சாளுந் திருந்தாத வோரைவரைத் தேய்ந்தர) கண்டதெல்லாவற்றிலும் சபலமாயிருக்குமே நெஞ்சு, அப்படிப்பட்ட நெஞ்சை இந்திரயங்கள் தம்வழியே யிழுத்துக் கொண்டு கிடக்குமே, நமக்கு சேஷமான நெஞ்சை இந்திரியங்கள் பணி கொள்ளுகையாவதென்? என்று எம்பெருமான் அவற்றை முஞ்சிதறப்புடைத்தானாயிற்று. தம்முடைய ஸர்வகரணங்களும் விஷயாந்தரவாஸநையுமறியாதே பகவத் விஷயத்திலேயே ப்ரவணமானபடி சொன்னவாறு. ஸர்வசக்தியான எம்பெருமான் அநாதிகாலமாகத் திருத்தப் பார்த்தவிடத்திலும் தருந்தாமலிருந்தனவாம் அவை. அசேதனங்களான இந்திரியங்களை ஐந்து என்று சொல்லவேண்டுமிடத்து ஐவர் என்றது –அவை அசேதனங்களைப் போலன்றிக்கே சேதநர்கள். போலவே நின்று நலியுந்தன்மையைப் பற்ற. திருமங்கையாழ்வாரும் * உடனின்றைவரென்னுள் புகுந்து * என்றருளிச் செய்த்து காண்க. இப்படிப்பட்ட வருனைத் தம்பக்கல் செய்தததைக் கண்ட ஆழ்வார், பண்டு கஜேந்திராழ்வானுக்குச் செய்த அருளும் இதற்கீடல்லவென்று துணிந்து பின்னடியருளிச் செய்கிறார். ஒரு முதலையின் வாய்ப்பட்டகளிறன்றோ அது, ஐந்து முதலைகளினாலன்றோ தாம் பட்டது. இவ்விடரைப்போக்கினது நிகரற்றபகாரமன்றோ. இங்கே ஈட்டு ஸ்ரீ ஸூக்தி, -“ஆனை நோவுபட்டது ஆயிரம் வத்ஸரம், அகப்பட்ட பொய்கை பரிச்சிந்நம், முதலை அஞ்சு, இத்தை மீட்டுக்கொண்ட மஹா குணத்துக்கு அதொரு குணமாறிற்றதோ?“

English Translation

All the while he stood watch over my lowly self, destroying the reckless five that ruled my heart, what more grace from the Lord, who graced the elephant in distress

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்