விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கோயில் கொண்டான்தன்*  திருக்கடித் தானத்தை* 
    கோயில்கொண்டான்*  அதனோடும் என்நெஞ்சகம்*;
    கோயில்கொள்*  தெய்வம்எல்லாம் தொழ*  வைகுந்தம் 
    கோயில்கொண்ட*  குடக்கூத்த அம்மானே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ - தங்களுக்கென்று விமானங்கயுடையரான நித்ய ஸூரிகளெல்லாரும் தொழும்படியாக
வைகுந்தம் கோயில் கொண்ட - ஸ்ரீ வைகுண்டத்தை வாஸஸ்தானமாகவுடையனாய்
குடக்கூத்த அம்மான் - (அவதரித்த விடத்தே) குடகூத்தாடும் பெருமானைவன்
திருக்கடித் தானத்தை தன் கோயில் கொண்டான் - திருக்கடித்தானத்தை தனது கோயிலாக ஸ்வீகரித்துக் கொண்டவனாய்
அதனோடும் - அது தன்னோடே

விளக்க உரை

என்பக்கவிலுண்டான ப்ர்ரேமோதியத்தாலே திருக்கடிகத்தானத் திருப்பதியோடே கூடவந்து என் ஹ்ருதயத்திலே புகுந்தருளினானென்கிறார். திருக்கடித்தானத்தைத் தனக்கு அஸாதாரணமான கோயிலாகக் கொண்டவன் ஆழ்வார் நெஞ்சிலுள்ளே வந்து புகவிரும்பினான், அப்போது திருக்கடித்தானத்தை விட்டுத் தான் மாத்திரமே வந்து புகுவதாக முதலில் நினைத்தானாம். அப்படியாகில் செருப்புவைத்துத் திருவடி. தொழுவாரைப் போலேயாகுமென்று தோன்றிற்றாம். அப்படியாக வொண்ணாதென்று அத்திருப்பதியையும் கூட்டிக் கொண்டு வந்து புகுந்தானாம். * அரவத் தமளியினோடு மழகிய பாற்கடலோடும் அரவிந்தப் பாவையுந்தானும் அகம்படிவந்து புகுந்து, பரவைத் திரைபலமோதப் பள்ளிகொள்கின்ற பிரானை * என்ற பெரியாழ்வார் திருமொழி இங்கே அநுஸந்திக்கத்தக்கது. திருக்கடித்தானத்தோடு மாத்திரமே வந்தானல்லன், ஸ்ரீ வைகுண்டத்து வைபவங்களோடும் க்ருஷ்ணாவதார வைபவங்களோடுங் கூடிவந்து புகுந்தா னென்கிறார் பின்னடிகளில். “தெய்வமெல்லாந் தொழ வைகுந்தங் கோயில்கொண்ட“ என்றதும் “குடக்கூத்தவம்மான்“ என்றதும் ஸாபிப்ராயம். நித்யஸூரிகளோடுகூட வைகுந்தத்தையுங் கூட்டிக் கொண்டுவந்தான், குடக்கூத்து முதலான அவதார

English Translation

The Lord who lives in godly Tirukkadittanam has also made my heart his temple, 'Tis he, -the wonderful pot dancer,- who is worshipped by all the temple god.s

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்