விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயப்பிரான்*  எனவல்வினை மாய்ந்துஅற* 
    நேசத்தினால் நெஞ்சம்*  நாடு குடிகொண்டான்*
    தேசத்துஅமரர்*  திருக்கடித்தானத்தை* 
    வாசப்பொழில்மன்னு*  கோயில்கொண்டானே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேசம் அமரர் - தேஜஸ்விகளான நித்ய ஸூரிகளுக்கும் ப்ராப்யமாய்
வாசம் பொழில் மன்னு - பரிமளம் மிக்க பொழில்கள் சேர்ந்தான
திருக்கடித் தானத்தை - திருக்கடித்தான மென்னும் தலத்தை
கோயில் கொண்டான் மாயப்பிரான் - கோயிலாகக் கொண்டவனான எம்பெருமான்
என வல் வினை மாய்ந்து அற - என்னுடைய வலிய கருமங்கள் ஒழிந்து போம்படியாக

விளக்க உரை

எம்பெருமான் திருக்கடித்தானத்தைப் பகலிருக்கை மாத்திரமாகக் கொண்டு என்னெஞ்சை நிரந்தரவாஸஸ்தானமாகக் கொண்டருளினானென்கிறார். ஆச்சரியமான குணசேஷ்டிதங்களையுடைய பெருமான் தன்னைப்பிரிந்து நான் பட்ட கிலேசமெல்லாம் தீரும்படி, (அதாவது) கீழ் * மாயக் கூத்தாவென்கிற பதிகத்தில் * காணவாராயென்றென்று கண்ணும் வாயும் துவர்ந்துபட்ட விடாயெல்லாம் தொலையும்படி என்னுடைய நெஞ்சமாகிற நாட்டிலே குடிகொண்டான் – நித்யவாஸம் பண்ணாநின்றான், நானுகந்த விடமென்று திருக்கடித்தானத்தையும் கோயில்கொண்டிராநின்றான். திவ்யதேசங்களில் பகலுமிரவும் பூர்த்யாக ஸேவை தந்தருளாமையாலே பகலில் மாத்திரமே அங்கு வாஸமென்னவேண்டியிருந்தது. என்னெஞ்சில் அப்படியன்றிக்கே நிரந்தரவாஸமுள்ளது. நெஞ்சநாடு – சோழநாடு தொண்டைநாடு பாண்டிநாடு மலைநாடு தென்னாடு வடநாடு என்கிறாப்போலே நெஞ்சநாடென்றும் ஒரு நாடு உண்டாயிற்றுப்போலும். இங்கு ஈடு, “ஸம்ச்லேஷ விச்லேஷங்களாலே ஒரு த்ரிபாத்விபூதியாக்கினானாயிற்று இவர் திருவுள்ளத்தை“

English Translation

The wonder-Lord who cut my wicked karmas has made my loving heart his cool abode. He lives in the midst of the radiant gods in Tirukkadittanam surrounded by fragrant groves

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்