விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    திருக்கடித் தானமும்*  என்னுடையச் சிந்தையும்* 
    ஒருக்கடுத்துஉள்ளே*  உறையும்பிரான் கண்டீர்*
    செருக்கடுத்துஅன்று*  திகைத்த அரக்கரை* 
    உருக்கெடவாளி*  பொழிந்த ஒருவனே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

செரு கடுத்து - யுத்தத்திலே செருக்கு விஞ்சி
திகைத்த அரக்கரை - ஆரைச் சண்டைக்கிழுக்கலாமென்று திசைத்திருந்த ராக்ஷஸர்கள்
உரு கெட - உருவம் கெடும்படியாக
வாளி வொழிந்த ஒருவன் கண்டீர் - அம்புகளைப் பொழிந்த மஹா வீரனன்றோ
திருக்கடித்தானமும் என்னுடைய சிங்கையும் - திருக்கடித்தானப்பதியையும் எனது நெஞ்சையு

விளக்க உரை

என்னிடத்தே வருகைக்கு இடையூறா யுள்ளவற்றையும் தானே தவிர்த்து, திருக்கடித்தானத்திலும் என்னுடைய ஹ்ருதயத்திலும் ஒருங்கே அபிநிவேசத்தைப்பண்ணி என்னுள்ளே யெழுந்தருளியிரா நின்றானென்கிறார். திருக்கடித்தானப்பதியையும் இவருடைய திருவுள்ளத்தையும் ஒக்க நினைக்கையாவது என்னென்னில், ஸ்ரீவசந பூஷணத்தில் – (171). “அங்குத்தைவாஸம் ஸாதநம், இங்குத்தை வாஸம் ஸாத்யம். * கல்லுங் கனைகடலு மென்கிறபடியே இது வித்தித்தால் அவற்றில் ஆகாம் மட்டமாயிருக்கும். * இளங்கோயில் கைவிடேலென்று இவன் ப்ரார்த்திக்கவேண்டும்படியா யிருக்கும். ப்ராப்யப்ரீதி விஷயத்வத்தாலும் க்ருதஜ்ஞதையாலும் பின்பு அவை அபிமதங்களாயிருக்கும்“ என்றருளிச் செய்யப்படுகிறது. இந்த ஸ்ரீஸூக்திகளின் கருத்தாவது திவ்யதேசங்களிற் காட்டிலும் ஞானிகளின் திருமேனியில் எம்பெருமான்பண்ணும் ஆதரம் அளவற்றது, எம்பெருமான் திவ்ய தேசங்களில் எழுந்தருளி யிருப்பதானது தக்கவுபாயங்களாலே சேதநரை அகப்படுத்திக் கொள்ளுகைக்காகவாகையாலே அந்த திவ்ய தேச வாஸம் ஸாதனம், இந்த சேதநன் திருந்தி இவனுடைய ஹ்ருதஙத்தினுளே தான் வஸிக்கப்பெற்றவது அத்திவ்யதேச வாஸமாகிய க்ருஷியின் பயனாகையாலே ஞானிகளிடத்தில் வாஸமே எம்பெருமானுக்கு பரமப்ரயோஜனம். * மலைமேல் தான்னின்று என்மனத்துளிந்தானை * என்றும், * பனிக்கடலில் பள்ளி கோளைப் பழக விட்டோடிவந்து என்மனக்கடலில் வாழவல்ல மாய மணாளநம்பி * கல்லுங் கனைகடலும் வகுந்த வானாடும் புல்லென்றொழிந்தன கொல் எபாவம், வெல்ல நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனதுள்ளத்தகம் * என்ற பெரிய திருவந்தாதிப் பாசுரத்தினால் விளங்கும். எம்பெருமான் புராதன திவ்ய தேசங்களில் நெடுநாளாகப் பண்ணிக் கொண்டிருந்த ஆதாரத்தைக் குலைத்துக்கொண்டு இன்று தன் ஹ்ருதயத்திலே அளவு கடந்த ஆதரத்தைப் பண்ணிக் கொண்டிருக்கும்படியைக் காணும் ஞானியானவன் “பிரானே! என்னுள்ளத்தனுள் புகுருகைக்கு பாலாலயம் போன்றிருந்த திருப்பாற்படல் முதலியவற்றில் ஆதரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது“ என்று எம்பெருமானை நோக்கி பிரார்த்திக்க வேண்டும்படியாகும். பரமபதம் திருப்பாற்கடல் அர்ச்சாவதாரங்கள் முதலிய ஸ்தானங்களிற் காட்டிலும் ஞானிகளின் ஹ்ருதயமே எம்பெருமானுக்குப் பரமபுருஷார்த்த மாகில், பரமபதம் முதலியவற்றை எம்பெருமான் விட்டுவிட வேண்டாவோ? அப்படி விட்டுவிட்டதாகத் தெரியவில்லையே, அவற்றிலும் உகந்து வர்த்திப்பதாகத் தெரிகிறதே, இதற்கு ஹேதுவென்? என்னிலும், எம்பெருமான் தனக்கு ப்ராப்யபூதரான ஞானிகள் அந்த ஸ்தலங்களிலே போரவுகப்புக் கொண்டிருப்பதனாலே அவர்களுகந்த ஸ்தலம் நமக்கு முத்தேச்யமாகவேணும் என்கிற எண்ணத்தினாலும், இத்தேசங்களில் நாம் வாஸம் செய்தபடியாலன்றோ நமக்கு ஞானிகளின் ஹ்ருதயத்தில் வாஸமாகிற மஹத்தான லாபம் செய்தபடியாலன்றோ நமக்கு ஞானிகளின் ஹ்ருதயத்தில் வாஸமாகிற மஹத்தான லாபம் கிடைத்தது“ என்கிற நன்றியுணர்க்கியினாலும் எம்பெருமானுக்கு திவ்யதேசவாஸமும் அபிமதமாகின்றனது – என்பதாம். ஆகவே தமிருக்கடித்தானப் பதியையும் தம்முடைய உள்ளத்தையும் ஓக்கநினைத்துப் பரிமாறுவதாக இங்கு அருளிச் செய்யப்பட்டதென்க.

English Translation

Look! The Lord has liked my thoughts destroyed my woes to the end. He lives to Tirukkadittanam, and lives m both in cool fragrant Tirukkadittanam, 'This he, who showered arrows then, and we destroyed the pride filled Rakshasas

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்