விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்து தோன்றாய்அன்றேல்*  உன் வையம்தாய மலர்அடிக்கீழ்* 
    முந்தி வந்து யான்நிற்ப*   முகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்*
    செந்தண்கமலக் கண்கைகால்*  சிவந்தவாய்ஓர் கருநாயிறு* 
    அந்தம் இல்லாக் கதிர்பரப்பி*  அலர்ந்ததுஒக்கும் அம்மானே!   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் கரு நாயிறு - ஒரு கரிய ஸூர்யன்
அந்தம் இல்லா கதர் பரப்பி - முடிவில்லாத கிரணங்களைப் பரப்பி
அலர்ந்தது ஒக்கம் அம்மானே - பரம்பினாற்போன்ற வடிவழகையுடைய ஸ்வாமியே!
வந்து தோன்றாய் அன்றேல் - (கீழே விரும்பினபடி) வந்து தோன்றா விட்டாலும்
வையம் தாய உன் மலர் அடி கீழ் - பூமியையளந்து கொண்ட உனது பாதாரவிந்தங்களின் கீழே

விளக்க உரை

தொண்டனேன் உன் கழல் காண வொரு நாள் வந்து தோன்றாய் * என்றார், இங்கேற வந்து தோற்றுவது முடியாதென்னில், என்னை ஆங்கே யழைத்து அடிமை கொள்ளவாவது வேண்டுமென்கிறாரிப்பாட்டில் “வந்து தோன்றயன்றேல்“ என்று ஒரே வாக்கியமாகக் கொள்வதும், “வந்து தோன்றாய், அன்றேல் என்று பிரித்துக் கொள்வதும் பொருந்தும். கீழ்ப்பாட்டில் பிரார்த்தித்ததையே மறுபடியும் பிரார்த்திக்கிறார் வந்து தோன்றாய் என்று நானிருந்த விடத்தே உன்னைக்கொண்டு வந்து காட்டியருளாய் என்றபடி. அன்றேல் – அது முடியாதாகில், என் ஆர்த்தியின் கனத்தைப் பார்த்துத் திருவருள் சுரந்து வந்து முகங்காட்டப் பார்த்திலையாகில் என்றபடி. * ஈங்சோர் பெண்பால் பொருளோ வெனுமிகழ்வோ இவற்றின் புறத்தாளென்றெண்ணோ * (திருவிருத்தம்.) என்கிறபடியே உன்னுடைய பெருமையையும் என்னுடைய சிறுமையையும் பார்த்து இங்கு வந்து முகங்காட்டத் திருவுள்ளமில்லையிகிலு மென்னவுமாம், உன் வையந் தாய மலரடிக்கீழ் முந்திவந்து யான்நிற்ப முகப்பே கூவிப் பணி கொள்ளாய் – வஸிஷ்ட சண்டாள விபாகம் பாரத திருவடிகளின் கீழே அடியேனை வரவழைத்துக்கொண்டு திருவுள்ளத்திற்கு உகப்பான கைங்கரியத்தை நியமித்துப் பணி கொள்ளாய் என்கிறார். பரதாழ்வானைப் போலே பிரிந்து தரித்திருக்கும் பிரக்ருதி யல்லேன், * மூஹூர்த்தமபி ஜீவாவோ ஜலாந் மத்ஸ்யாவிவோத்தருதௌ * என்ற இளையபெருமாள்படியான வென்னைக் கூவி ஏவி அடிமை கொண்டருளவேணு மென்கிறார். இப்படி நிர்ப்பந்திக்கைக்குக் காரணமென்னென்ன, பிரிந்து பிழைக்கமுடியாத வடிவழகு படுத்தும்பாடிது காண் என்கிறார் – பின்னடிகளால் சிவந்து குளிர்ந்த தாமரை போன்ற திவ்யாவயங்களையுடையையாய், நீல நிறத்தனான வொரு ஸூர்யன் அளவிற்ந்த கிரணங்களைப் பரப்பிக்கொண்டு விகஸிதனானாய் போலே யிருக்கிறாயாகையாலே, நீயாவது இங்கு வரவேணும் என்னையாவது அங்கு அழைத்துக் கொள்ளவேணுமென்று நிர்ப்பந்திக்கிறேன் என்றாராயிற்று.

English Translation

Come before me or else call me to your presence, that I may serve the lotus feet that strode the Earth, O Dark Lord resembling a black Sun of infinite lustre with glowing red spots of cool lotus eyes, lips, hands and feet!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்