விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    'முடிசேர் சென்னி அம்மா!* நின்மொய்பூம்தாமத் தண்துழாய்க்* 
    கடிசேர் கண்ணிப் பெருமானே!'* என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
    படிசேர்மகரக் குழைகளும்*  பவளவாயும் நால்தோளும்* 
    துடிசேர் இடையும் அமைந்தது ஓர்*  தூநீர் முகில்போல் தோன்றாயே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஏங்கி அழுதக்கால் - பொருமிப் பொருமியழுதால்
படி சேர் மகரம் குழைகளும் - வடிவுக்குச் சேர்ந்த மகரகுண்டலங்களும்
பவளம் வாயும் - பவளம் போன்ற திருவதரமும்
நால் தோளும் - நான்கு திருத்தோள்களும்
துடி சேர் இடையும் அமைந்தது - துடிபோலே யிருக்கிற இடையுமாயமைந்த

விளக்க உரை

ஆபர்ணசோபையும் அவயவசோபையுமுடையவொரு காளமேகம் நடந்து வருகிறதோவென்னலாம்படி வந்து தோன்றவேணுமென்கிற ஆவலைக் காட்டுகிறாரிதில். உலகுக்கெல்லாம் அதபதி இவனே“ என்று கேரட்சொல்லித்தருகின்ற திருவபிஷேகமணிந்த சென்னியையுடைய ஸர்வேச்வரனே! என்றும், * தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்மேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மானே! என்றும் சொல்லிச்சொல்லி அப்படிப்பட்ட அழகைக் கண்ணாரக் காணவேணுமென்று விரும்பி நான் பொருமிப் பொருமியழுகிறேனே, என்னழுகைக்குரல் உனது செவியில் விழவில்லையோ? அழுகைக் குரலில் தளர்த்தியையறிந்தால் விரைந்தோடிவந்து நிற்கவேண்டாவோ? எங்ஙனே வந்து தோன்றவேணுமென்கிறாயோ, ஓர் தூநீர் முகில்போல் தோன்றவேணும், அது எப்படிப்பட்ட முகிலாயிருக்க வேணுமென்னில், மகரகுண்டலங்களும் பவளவாயும் நான்கு தோள்களும் நுண்ணியஇடையும் அமைந்ததாயிருக்கவேண்டும். இப்படியல்லாமல் ஆகாசத்திலே திரிகிற நிரவயவமான மேகம் போல்வரில் வேண்டேன். என்றாராயிற்று. படிசேர் மகரக்குழைகளும் – படிசேர் என்றது இயற்கையாகச் சேர்ந்த என்றபடி. திருமேனியிலே பொருந்தின என்றுமாம். தொன்றாய் – உடன்பாட்டுப் பொருளும் எதிர்மறைப் பொருளும் கொள்ளலாம்.

English Translation

O Lord of radiant coiffure, Lord of fragrant garland, O Rain-cloud Lord, I despair and weep calling for you, Alas, I do not see you, with your befitting ear rings, your coral lips, your four arms and slender waist!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்