விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மாயக்கூத்தா!வாமனா!*  வினையேன்கண்ணா! கண்கைகால்* 
    தூயசெய்ய மலர்களா*  சோதிச்செவ்வாய் முகிழதா*
    சாயல்சாமத் திருமேனி*  தண்பாசடையா*  தாமரைநீள் 
    வாசத்தடம்போல் வருவானே!*  ஒருநாள் காண வாராயே.    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மாயக் கூத்தா - ஆச்சரிய சேஷ்டிதங்களை யுடையவனே!
வாமனா - வாமன லேஷங்கொண்டவனே!
வினையேன் கண்ணா - மஹாபாபியான என்கைக்கு எட்டாத க்ருஷ்ணனே!
கண் கைகால் தூய செய்ய மலர்களா - திருக்கண்களும் திருக்கைகளும் திருவடிகளும் சிவந்தலர்ந்த பூக்களாகவும்
சோதி செம் வாய் முகிழதா - அழகிய சிவந்த திருவதரம் முகுளமாகவும்

விளக்க உரை

கண்டவளவிலே விடாயெல்லாம் தீரும்படியான தொரு தாமரைத் தடாகம் போலே நான் காணும்படி வந்தருள வேணுமென்று வேண்டுகிறார். தமக்கு இப்படிப்பட்ட கிலேச முண்டானதற்கு ஹேதுவையருளிச் செய்கிறார் முதலடியில் மாயக்கூத்தா வாமனா! – பாளனாய்ச் சென்று செய்த செயல்களையும் நெஞ்சார நினைத்தேன், நினைத்த மாத்திரத்திலே அவ்வடிவுதன்னை நாம் கட்கூடாகக் கண்டே தீரவேணுமென்று ஆவல் கிளர்ந்தது, அதனால் இப்படி அலற்றுகிறேன்காண் என்பது குறிப்பு. வினையேன் கண்ணா வென்பதற்கு நம்பிள்ளையருளிச் செய்யும் விசேஷார்த்தங்காணீர் – “ஸ்ரீவாமன்னாய் வந்து அவதரித்தது இந்த்ரனுக்கானாப்போலெ க்ருஷ்ணனாய் வந்தவதரித்தது தமக்காக வென்றிருக்கிறார்“ என்று, க்ருஷ்ணாவதார ஸமாப்திக்கும் ஆழ்வாருடைய திருவ்வதாரத்துக்குமிடையிலே சில நாட்களே சென்றனவாக ஸம்ப்ரதாய மாதலால் இங்ஙனே யருளிச் செய்வது மிகப்பொருந்தும். பல்லிலே பட்டுத் தெறித்தாற்போலே அவ்வவதாரத்திற்குச் சிறிது பிற்பட்டபடியாலே வெறுத்துச் சொல்லுகிறார் வினையேன் என்று. இங்ஙனே அவனையழைத்து, ஒரு தாமரைத் தடாகம்போல் வரவேணுமென்கிறார் மேல் தடாகத்திற்கு மெம்பெருமானுக்கு முண்டான ஒற்றுமையைத் தாமே நிரூபணம் செய்தருளுகிறார் (கண் கை கால் தூய செய்ய மலர்களா இத்யாதியால்) கிட்டினாரோடு முதலுறவு பண்ணும் திருக்கண்களும், அத்திருக்கண்ணோக்குக்குத் தோற்றவர்களை அணைக்கும் திருக்கைகளும், திருக்கைத்தல ஸபர்சத்துக்குத் தோற்று விழுந்திருவடிகளுமாகிய இவ்வயவங்கள் இந்தடாகத்திற்குரிய தாமரைகளாம். முகுந்தமாலையில் * கரசரணஸரோஜே ஹரிஸரஸி * என்றதும் இங்கே அநுஸந்தேயம். தடாகத்தில் தாமரைப்பூக்கள் மாத்திரமேயோ இருப்பது? முகுளமுமிருக்குமே, அதுவும் இங்கு உண்டென்கிறார் சோதிச் செவ்வாய்முகிழதா என்பதானால். புகரையுடைத்தாய்ச் சிவந்திருக்கிற திருப்பவளமே முகுளமாகக் கொள்ளத்தக்கது. காம்பீர் யாதிசயத்தாலே பரிபூர்ணஸ்மிதம் பண்ணாமல் விகாஸோந்முகமான ஸ்மிதமே யிருப்பது கொண்டு திருவதரத்தை முகுளாவஸ்தையோடு ஒப்பிட்டுச் சொல்லுகிறது. இனி, தாமரையிலையின் ஸ்தானத்திலே இங்கு எதுவென்னில், சாயல்சரமத்திருமேனி தண்பாசடையா என்கிறார். மேலே ஒன்பதாம்பத்திலே * அக்கமலத் திலைபோலுந் திருமேனியடிகளுக்கே * என்ற பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது. பச்சைமாமலை போன்ற மேனியானது தாமரையிலைக் கொப்பாகுமென்க. பசுமை அடை, பாசடை, (அடை இலை) ப்ரசுரமாயிருப்பதொரு தடாசும் கைகால் கைகால் முளைத்து நடந்து வருமாபோலே வரவேணும் பிரானே! என்கிறார். “வாசத்தடம்போல் வரவேணும்” என்னாதே “வரசத்தடம் போல் வருவானே! வாராய்“ என்று சொல்லியிருப்பது – இங்ஙனே முன்பு தம்பக்கல் வந்தபடியைத் தெரிவிக்கும். இது அபூர்வ ப்ராத்தனையன்று, ஏற்கனவே இப்படிப்பட்ட அநுபவம் எனக்கு நேர்ந்திருக்கிறது, அதனையே இப்போதும் பிரார்த்திக்கிறனென்றபடி.

English Translation

Vamana, my love! Your frame is a cool lotus pond, -your eyes, hands and feet are like full lotus blossoms, you radiant lips like their buds, your limbs like the dark, leaves! O Wonderful dancer, will you not come one day to see me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்