விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    உரையா வெம்நோய்தவிர*  அருள் நீள்முடியானை* 
    வரையார்மாடம்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*
    உரையேய் சொல்தொடை*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    நிரையே வல்லார்*  நீடு உலகத்துப் பிறவாரே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உரையா வெம்நோய் தவிர - வாய்கொண்டு சொல்லாவொண்ணாதபடி வெவ்விய கலக்கமாகிற நோயானது தீரும்படி
அருள் - க்ருபை செய்தருளின
நீள் முடியானை - ஸர்வாதிக சேஷியானவனைக்குறித்து,
வரை ஆர் மாடம் மன்னு குருகூர் சடகோபன் - மலைபோன்ற மாடங்கள் பொருந்திய திருநகரிக்குத் தலைவரான ஆழ்வாருடைய
உரை எய் சொல்தொடை ஓர்ஆயிரத்துல் இபத்தும் - ஸ்ரீ ஸூக்தியாயமைந்த ஆயிரம் பாசுரங்களினுள்ளும் இப்பதிகத்தை

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுடைய தனிமைக்கண்டு அஞ்சவேண்டும் நிலமான ஸம்ஸாரத்திலே பிறவார் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். அகிலஹேய ப்ரத்யநீக கல்யாணைகதாநனான எம்பெருமானுக்கு என் வருகிறதோவென்று அஞ்சினவிது விலக்ஷணமான நோயாகையாலே உரையா வேந்நோய் என்கிறார். வாய்கொண்டு உரைக்க முடியாததான வெவ்விய நோய் என்றபடி. இது தவிரும்படியான அருள்செய்தானாயிற்று உபய விபூதிநாதனான ஸர்வேச்வரன். இவ்விடத்தில் நீண் முடியானை யென்றருளிச் செய்தற்கு அம்மங்கியம்மாளென்னு மாசிரியர் ஓர் இன்சுவைப்பொருள் கூறுவராம், “ஆழ்வாருடைய அச்சம் தீரும்படி உம்முடைய வபேக்ஷிதம் செய்கிறோமென்று தலைதுலுக்கினான் போலும்“ என்று. ப்ரக்ருதத்தில் ஆழ்வார்க்கு அபேக்ஷிதம் செய்கையாவது * ஆளுமாளார் ஆழியுஞ்சங்கும் சுமப்பார்தாம் * என்ற இழவுநீர் ஆழியும் சங்கும் சுமக்கவல்ல ஆள்களை ஆளுகையாம்.

English Translation

This decad of the beautiful thousand songs by tall mansioned kurugur city's Satakopan addresses the tall-crowned Lord who destroys the sickness of birth. Those who master it will secure freedom from rebirth

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்