விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்றே என்னை*  உன்ஏர்ஆர்கோலத்திருந்து அடிக்கீழ்* 
    நின்றே ஆட்செய்ய*  நீகொண்டருள நினைப்பதுதான்*
    குன்றுஏழ் பார்ஏழ்*  சூழ்கடல்ஞாலம் முழுஏழும்* 
    நின்றே தாவிய*  நீள்கழல் ஆழித் திருமாலே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நின்றே தாவிய - நின்ற நிலையிலே நின்று ஆக்கிரமித்துக்கொண்ட
நீள் கழல் - நெடிய திருவடிகளை யுடையையாய்
ஆழி - திருவாழியையுமுடையையான
திருமாலே - திருமகள் கொழுநனே!
என்னை - அடியேனை

விளக்க உரை

தமக்காகப் பிறர் ஒருவாய்ச் சொல்கூடச் சொல்லுகின்றிலரே யென்று கிலேசப்பட்டார் கீழ்ப்பாட்டில். “பிறர்கதை கிடக்கட்டும், எம்பெருமான்றன்னையே கேட்போம் என்று துணிந்து “உன் திருவடிக்கீழே பரிகைக்கு நிலையாளாக என்னைக் கொள்வது என்றைக்கு? என்று அவனையே கேட்கிறார். இவர் கேட்பதற்கு முன்னமே எம்பெருமான் “ஆழ்வீர்! உம் அபேக்ஷிகம் செய்கிறோம்“ என்று ஆபிமுக்கியம் தோற்ற நிற்க, என்றே? என்கிறார், அந்த நாளைக் குறிப்பிட்டாலாகாதோ வென்கிறார். எதற்கு நாள் குறிப்பிட வேணுமென்ன, என்னை யென்று தொடங்கி அதைச் சொல்லுகிறார். என்னை யென்றது - உன்னோடு கூடவே யிருந்து உனக்கு ஸதா மங்களாசாஸனம் பண்ணியல்லது தரித்திருக்க கில்லாத வென்னை யென்றபடி. (உன் ஏரார் கோலத் திருத்தடிக்கீழ்) உன்திருவடிகளின் பரமபோக்யதையை நினைத்துக்கொண்டால் அத்திருவடிகளின் நிழலும் ரேகையுமாக விருப்பதன்று, தனிப்பட வொரு பொருளாக இருக்க என்னாலாகுமோ என்கிறார். திருவடிகளுக்கு ஏரார் கோலமாவது - * சங்காதாங்க கல்பகத்வஜாரவிந்தாங்குச வஜ்ரலாஞ்சனங்களை யுடைத்தாயிருக்கை. திருந்து என்றது – அடியார்களைத் திருத்திப்பணி கொள்ளவல்லமையைச் சொன்னபடி, அதாவது –ஒரு ப்ரயோஜனத்திற்காக வந்து சேர்ந்தவர்களையுங் கூட தம்கையாம். இப்படிப்பட்ட திருவடிகளின்கீழே நின்றேயாட்செய்ய நீ கொண்டருள நினைப்பது என்றே? – நானாக அடிமை செய்யப்புகுவது புருஷார்த்தமன்றே, ஆனை கிடக்க, அதன்மேல் நீர்மாக ஏற் நினைக்குமாபோலே யாகுமன்றோ வது, * க்ரியதாமிதி மாம் வத * என்றும் * ஏவ மற்றமாராட் செய்வார் * என்றுஞ் சொல்லுகிறபடியே ஏவிப் பணிகொள்வதன்றோ சீரியது, அங்ஙனே செய்யத் திருவுள்ளம்பற்றி யிருக்கும் நாள் எதுவோவென்று கேட்கிறார். நின்றேயாட் செய்கையாவது – ப்ரயோஜநாந்தரங்களில் நெஞ்சு செல்லாமல் ததேக ப்ரயோஜநத்வபுத்தி நிலைநிற்கப் பெற்று கைங்கரியம் பண்ணுகை. ஆழ்வார் இங்ஙனே கேட்கவும் எம்பெருமான் மறுமாற்ற மொன்றுஞ் சொல்லாமையினாலே “ஒரு கைம்முதலு மில்லாதவுமக்கு நானென்ன சொல்லுவது“ என்றிருந்தானாகக் கொண்டு, தாவியன்றுலக மெல்லாம் தலைவிளாக் கொண்டாயே, அது யாரிடத்தில் என்று கைம்முதல்கண்டு செய்தது? என்று கேட்பார் போலப் பின்னடிகளருளிச் செய்கிறார். திருவண் பரிசாரத்திலெழுந்தருளி யிருக்கிற விருப்புக்கே நான் பரிய வேண்டி யிருக்க, அதற்குமேலே அதிமாநுஷமான செயலையும். நீ செய்தருளினால் நான் பரியாதிருக்க முடியுமோ வென்னுமபிப்ராயத்தாலே உலகளந்த சரிதையை எடுத்துரைக்கிற ரென்னவுமாம். ஸப்தகுல பர்வதமென்ன, ஸப்த த்வீப மென்ன, அவற்றைச் சூழ்ந்த ஸப்தஸமுத்ரமென்ன, இப்படி ஏழுவகைப்பட்ட பூமியை யெல்லாம் நின்ற நிலையிலே நின்றளந்து கொண்டருளும்படி நீண்ட திருவடிகளை யுடையாய்! கையுந் திருவாழியுமான திருமாலே! ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு கல்லுங் கரடுமான பூமியை யளந்து கொண்ட சிரமந்தீர சிசிரோபசாரம் பண்ணப் பெறும் நாள் என்று? என்று கேட்டாராயிற்று.

English Translation

O Lord of discus who strode the seven mountains, the seven oceans and the seven worlds in one step! O when will you consider and grant me the joy of serving your lotus feet?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்