விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஞாலம் போனகம்பற்றி*  ஓர்முற்றா உருஆகி* 
    ஆலம்பேர்இலை*  அன்னவசம்செய்யும் அம்மானே*
    காலம்பேர்வதுஓர்*  கார்இருள் ஊழி ஒத்துஉளதால்*  உன் 
    கோலம்கார்எழில்*  காணலுற்று ஆழும் கொடியேற்கே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

ஓர் முற்றா உரு ஆகி - மிகச் சிறு பிராயமான வடிவையுடையையாய்
ஞாலம் போனகம் பற்றி - ஜகத்தையெல்லாம் அமுது செய்து
ஆல் பேர் இலை - ஆலினுடைய மிகச்சிறிய இலையிலே
அன்னவசம் செய்யும் அம்மானே - கண் வளர்ந்தருளுகிற ஸ்வாமியே!
கார் எழில் - காளமேகம் போன்றழகிய

விளக்க உரை

ஞாலம் போனகம் பற்றி – ஆவிலையமர்ந்த பெருமானுக்கு உலகம் முழுவதும் உணவாயிற்று, இது நமக்கு ஸாத்மிக்குமா ஸாத்மியாதா? என்று கூட ஆராயாமல் பூமிப்பரப்பையெல்லாம் வயிற்றிலே எடுத்து வைத்துக்கொண்டமைக்கு வயிறெரிகிறார். அதற்கு “பாலன் தனதுருவாய் எபுலண்டு“ என்றதாயிற்று. அதற்குமேலே ஆலம் பேரிலை அன்னவசஞ்செய்யும்மமானே! – பேரிலை என்றது எதிர்மறையிலக்கணையால் சிறிய இலை என்று வருமுறக்கத்திற்கு அன்னவச மென்று பெயர். கையமேழையுமுண்ட ஆயாஸத்தினால் திருக்கண்வளர்ந்தருள நினைத்தால் விசாலமானதோரிடத்தைக் கற்பித்துக் கொண்டு அதிலே * தன் தாளுந் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி * என்னும்படியே விசாலமாகக் கண்வளர்ந்தருளலாகாதோ? மிகச்சிறியதாய் முகிழ்விரியாத்தான ஆலந்தளிரிலேயோ கிடப்பது? சரிந்து விழுந்தால் அந்தோ! என்னாகும்? என்று வயிறு பிழக்கிறார். அன்னவசஞ் செய்யு மென்றவிடத்து ஈடு, - “உணவுக்கீடாக இடம்வலங்கொள்ளும், யசோதைப் பிராட்டி தொட்டில் பண்ணும் வ்யாபார மெல்லாம் பண்ணுமாயிற்று அதுக்குள்ளே.“ இனி, பின்னடிகளால் தம்முடைய அச்சமிகுதியை விவரிக்கிறார். காரெழில் உன்கோலம் காணுலுற்று ஆழும் கொடியேற்கு, பேர்வதோர் காலம் காரிருள் ஊழியொத்துள்ளதால் என்று அந்வயிப்பது. மங்களாசாஸனம் பண்ணுகைக்கு உனது அழகிய வடிவைக்காண ஆசைப்பட்டு அது பெறாதே நோவுபடுகிற மஹாபாபியானவெனக்கு ஒரு க்ஷணகாலமும் கல்பகோடிஸஹஸ்ரமாக நெடுகாநின்றது காண்! என்கை. ஆறாயிரப்படி, - “ஓர் முற்றாவுருவாய் அந்தப்பிள்ளைத் தனத்தாலே ஸர்வ லோகங்களையும் அமுது செய்து, பெரிய வெள்ளத்திலே சிறியதோராலிலையிலே, யசோதைப்பிராட்டியைப் போலே யிருப்பாளொரு தாயாருமின்றியே தனியே கண்வளர்ந்தளுகிற தசையிலே துணையாயிருக்கப் பெறாமையாலும் உன் வடிவழகை. காணவாசைப்பட்டுப் பெறாமையாலும் அகாதமான துக்கார்ணவத்திலே நிமக்நனாயக் கிடக்கிற வெனக்கு ஒரு க்ஷணமானது அந்தகாரமயமான ராத்ரி யுகமாய்ச் செல்லுகிறதென்கிறார்.“

English Translation

O Lord who swallowed the Earth as a "A devotee waits there longing for; morsel and slept like a child, floating on chance to go out with you bearing, fimoctrprivispslikeadarm your conch and discus"

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்