விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாதம் அடைவதன் பாசத்தாலே*   மற்றவன்பாசங்கள் முற்றவிட்டு* 
    கோதில்புகழ்க்கண்ணன் தன்அடிமேல்*   வண்குருகூர்ச் சடகோபன்சொன்ன*
    தீதில் அந்தாதிஓர் ஆயிரத்துள்*  இவையும்ஓர் பத்து இசையொடும் வல்லார்* 
    ஆதும்ஓர் தீதுஇலர்ஆகி*  இங்கும்அங்கும் எல்லாம் அமைவார்கள் தாமே.      (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீது இல் அந்தாதி ஓர் ஆயிரத்துள் - தீதற்றதாய் அந்தாதித் தொரடையாயமைந்த ஆயிரத்துள்
இவையும் ஓர் பத்து - இவை பத்தையும்
இசையோடும் வல்லார் தாம் - இசையோடுங்கூடப் பயிலவுல்லவர்கள்
ஆதும் ஓர் தீது இலர் ஆகி - ஒருவகைக்குற்றமுமற்றவர்களாகி
இங்கும் அங்கும் - உபய விபூதியிலும்

விளக்க உரை

இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைத்துத் தலைக்கட்டுகிற பாசுரமிது, உபயவிபூதியிலும் பகவதநுபவமே யாத்திரையாயிருப்பதே இத்திருவாய்மொழி கற்கைக்குப் பலன் என்கிறது. புறம்புண்டான பற்றுக்களையடைய வாஸனையோடே விட்டபடியே எம்பெருமான் திருவுள்ளத்தில் நன்குபடுத்துமதுவே இத்திருவாய்மொழிக்கு உயிரான விஷயமாதலால் “பாதமடைவதன் பாசத்தாலே மற்ற வண்பாசங்கள் முற்றவிட்டு“ என்றார். கோதில் புகழ்க்கண்ணன் – கண்ணனுடைய புகழ்க்கு ஏது கோது? என்னில், அவனையும் விரும்பி மற்ற வன்பாசங்களையும் விரும்புகைதான் சோது, “குணங்களுக்குக் கோதாவது, தன்னையொழியப் புறம்பேயும் நசைபண்ணும்படியாயிருக்கை“ என்பது நம்பிள்ளையீடு அங்ஙனே கோதற்ற புகழையுடைய கண்ணபிரானது திருவடிகளிலே ஆழ்வாரருளிச்செய்தது தீதிலந்தாதியோராயிரம். நாராயணகதையைச் சொல்லுவதாக ஆரம்பித்த மஹாபாரதம் பூசல் பட்டோலேயென்று பரந்தது. ராவ்வருத்தரந்தும் சொல்லுவதாக எழுந்த ஸ்ரீராமாயணம் – அப்படி இதர கதைகளின் ப்ரஸ்தாவகந்தமும் கொள்ளாமலிப்பதுவே இதற்குத் தீதில்லாமையென்க. அப்படிப்பட்ட ஆயிரத்தினுள் இப்பதிகை இசையோடும் சொல்லுமவர்கள் * பொய்ந்நின்ற ஞானமும் பொல்லாவொழுக்கு மழுக்குடம்பும் * என்னும்படியான தீது ஒன்றுமில்லாதவராகி இஹலோகத்தோடு பரலோகத்தோடு வாசியற எங்கும் குறையற்றிருப்பர்கள் – என்றாராயிற்று.

English Translation

The faultless decad from the Andadi of thousand songs by kurugur Satakopan who gave up all his passions for securing Krishna's feet, -those can sing this to the glorious Krishna Lord will become faultless and attain everything on Earth and in Heaven

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்