விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்னுடை நல்நுதல் நங்கைமீர்காள்!*   யான் இனிச்செய்வதுஎன்? என் நெஞ்சுஎன்னை* 
    நின்இடையேன் அல்லேன்' என்றுநீங்கி*  நேமியும் சங்கும் இருகைக்கொண்டு*
    பல்நெடும்சூழ்சுடர் ஞாயிற்றோடு*   பால்மதி ஏந்தி ஓர்கோலநீல* 
    நல்நெடும்குன்றம் வருவதுஒப்பான்*   நாள்மலர்ப் பாதம் அடைந்ததுவே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் நெஞ்சு - எனக்கு வீதேயமாயிருந்த நெஞ்சானது
நின் இடையேன் அல்லேன் என்று - உனக்கு நான் உறுப்பாலேனல்லேன்“ என்று சொல்லி
என்னை நீங்கி - என்னை விட்டகன்று,
கேமியும் சங்கும் இரு கை கொண்டு - திருவாழி திருச்சங்குகளை இரண்டு திருக்கையிலுமேந்திக் கொண்டு
ஓர் கோலம் நீலம் நல் நெடு குன்றம - ஓர் அழகிய நீல மஹாபர்வதம்

விளக்க உரை

“நங்காய்! எது எப்படியிருந்தாலும் உனக்கு ஹிதமே கோருமவர்களான நாங்கள் சொல்லுமதை நீ கேட்கவேணுமே“ என்று தாய்மார் சொல்ல “ஆமாம், கேட்க வேண்டியது அவசியந்தான், உங்கள் வார்த்தை கேட்கைக்கு நெஞ்சுவேணுமே, அது இங்கில்லையே, அவன் பக்கல் போயிற்றே, என் செய்வேன்? என்கிறாள் தலைவி. யான் இனிச் செய்வது என்? ஸ்வதந்திரனான எம்பெருமானைத்தான் நியமிக்கமுடியவில்லையென்றால், பரதந்திரமான நெஞ்சையும் அந்தோ! நியமிக்க முடியவில்லையே, யான் என் செய்வேன்? என்கிறாள். “என்னெஞ்சு“ என்னும்படியாக எனக்கு விதேயமாயிருந்த நெஞ்சன்றோ, அதைக்கொண்டு ஜீவிக்க வேண்டியவளன்றோ நான், இப்படியிருக்க, நிர்தாக்ஷிண்யமாய் அது என்னைவிட்டகன்றதே, அகன்றுபோம்போது வெட்டிதாகவொரு வார்த்தையும் சொல்லியன்றோ போயிற்று, அது என்னென்னில், (நின்னிடையேனல்லேனென்று.) “ஆழ்வீர்! இனி உமக்கும் நமக்கும் யாதொரு ஸம்பந்தமுமில்லைகாணும்“ என்று உறுவறுத்துக் கொண்டு போயிற்றே, ஸம்ந்யாஸாச்ரமஸ்வீகாரம் செய்வார் போமாப்போலே யன்றோ போயிற்று. போனாலென்ன? பின்தொடர்ந்து சென்று பிடிக்கவொண்ணாதோ வென்கிறீர்களோ? பின்தொடரவொண்ணாதபடி கடலிலேயன்றோ சென்று புக்கது. கடல்வண்ணனுடைய திருவடிவாரத்திலே லயித்துவிட்டதே! இப்படி நெஞ்சைப் பறிகொடுத்தநான் உங்கள் ஹிதவசனங்கேட்கப் பரிகரமற்றிருக்கின்றேனே, என்செய்வேன்? என்றாளாயிற்று. பின்னடிகளில் எம்பெருமான் ஒரு குன்றமாக வருணிக்கிறாள். அதுதன்னிலும் இல்பொருளுவமை (அபூதோபமை) உள்ளது. ஒரு திருக்கையில், திருவாழியாழ்வானையும், மற்றொரு திருக்கையில் திருச்சங்காழ்வானையும் எந்தியிராநின்ற பச்சைமாமலைபோல் மேனியனான எம்பெருமானுக்கு – ஏககாலத்திலே ஸூர்யசந்திரர்களைத் தன்னிடத்திலே கொண்டதொரு பெரியமலை ஏற்ற உவமையாம். திருவாழியாழ்வானுக்கு ஸூர்யனோடு ஸாம்யமும் திருச்சங்காழ்வானுக்குச் சந்திரனோடு ஸாம்யமும் ப்ரஸித்தம். * ஆங்கு மலரும் குவியும் மாலுந்திவாய், ஒங்கு கமலத்தினொண்போது, ஆங்கைத் திகிரிசுடரென்றும் வெண்சங்கம், வானிற்பகருமதியென்றும் பார்த்து. * (மூன்றாந்திருவந்தாதி) என்ற பேயார் பாசுரம் இங்கு நினைக்கத்தக்கது.

English Translation

O My fair-bangled Sakhis! My heart left me saying, "Not thine anymore", and joined the lotus feet of the Lord. Who came walking like a huge dark mountain with the radiant Sun-like discus and Moon-white conch in hands, Now what can I do?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்