விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    நங்கள் வரிவளையாய் அங்காளோ*   நம்முடை ஏதலர் முன்பு நாணி* 
    நுங்கட்கு யான்ஒன்று உரைக்கும்மாற்றம்*   நோக்குகின்றேன் எங்கும் காணமாட்டேன்*
    சங்கம் சரிந்தன சாய்இழந்தேன்*   தடமுலை பொன்நிறமாய்த் தளர்ந்தேன்* 
    வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்*  வேங்கடவாணனை வேண்டிச்சென்றே.   (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வரி வளை நங்கன் ஆயங்காளோ - அழகியவனையணிந்த நம்முடைய தோழிகளே!
நம்முடை ஏதலர் முன்பு நாணி - நம்மிடத்துப் பகைபாராட்டுகின்ற தாய்மாரின் முன்புசொல்ல வெட்கப்பட்டு
நுங்கட்கு யான் உரைக்கும் மாற்றம் ஒன்றுநோக்குகின்றேன் - உயிர்த் தோழிகளான வுங்களுக்கு மாத்திரம் செவிப்படும்படி நான் ஒரு வார்த்தை சொல்லப்பார்க்கின்றேன்,
எனக்கும் காணமாட்டேன் - ஆனாலும், என்னுடைய நிலைமையை நான் ஒரு விதத்திலும் பாசுரமிட்டுச் சொல்லும் வழி அறிகின்றிலேன், (ஆகிலும் சொல்லுகேன் கேண்மின்)
வெம் கண் பறவையின் பாகன் எம் கோன்  - வெவ்வியபார்வையையுடைய பெரிய திருவடியை நடந்துமவனாய் அஸ்மத்ஸ்வாமியான

விளக்க உரை

“நம்முடையேதலர்“ என்றதற்கு ஆசார்யஹ்ருதயத்தில் விசேஷ ஸவாபதேச மருளிச்செய்யப்படுகிறது. அதில் இரண்டாம் பிரகரணமுடியில் (139) “மகள் நம்முடையேதலர் யாமுடையத்துணையென்னும் ஸித்த ஸாதந ஸாத்யபரரை“ என்றுள்ளது. பஹிரங்கசர்மஜ்ஞாநாதி உபாயாந்தரங்களிலே ஊன்றினவர்களை பஹிரங்க சத்ருக்களென்றும், ஸித்தோபாயபூதனான அவனுடைய உபாயத்வத்திலே ஊன்றி நின்று, “பதறுதல் பராதந்திரியத்திற்குச் சேராது“ என்று நிஷேதிக்கிற ஸித்தோபாய நிஷ்டரை அந்தரங்கசத்ருக்களென்றும் சொல்லுகிறது. இப்பாசுரத்தில் “ஏதலம்“ என்று ஸாமான்யமாகச் சொல்லாமல் “நம்முடையேதலர்“ என்று விசேஷித்துச் சொல்லுகையாலே அந்தரங்க சத்ருக்களே இங்குப் பொருளாக வமையும் வித்தோபாய நிஷ்டைக்கு ப்ரதிகூலரான ஸாத்யோபாய நிஷ்டரைத் தாய்மார் சத்ருக்களான நினைத்திருப்பர், பதற்றத்திலே நின்ற மகளுடைய நினைவுக்கு அது எதிராகையாலே அப்படிப்பட்ட நினைவுடைய தாய்மாரை இவள் அந்தரங்க சத்ருவாக நினைக்கத் தகுதியுள்ளது. ஆகவே, இங்கு “நம்முடையேதலர் முன்பு“ என்றது – தாய்மார்முன்பு என்றே பொருள்பட்டு நிற்குமென்க. இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி “இவளுக்குச்சில சத்ருக்கள் இல்லையிறே, ஹிதஞ்சொல்லி மீட்கப்பார்க்கிற தாய்மாரிறே சத்துருக்கன்“ என்பதாம். அவர்கள் முன்பு தொழிந்தாயாகிலும் எங்கட்குச் சொல்லலாகாதோ?“ என்று தோழிகள் கேட்டபடியாலே, அவர்களுக்குச் சொல்லாது மறைத்துவைத்து உங்களுக்குச் சொல்லலாம்வார்த்தை என்னவிருக்கிறது, ஒன்றும் சொல்லத் தெரியவில்லையேயென்றாளாயிற்று. ஆனாலும் சிறிது சொல்லென்னச் சொல்லுகிறாள் சங்கஞ்சரிந்தனவென்று தொடங்கி * என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினரே * என்று ஆண்டாளருளிச்செய்த்துபோல, என்னுடைய சரிவளையைச் சரிவளையே யாக்கினர் தலைவர் என்கிறாள் போலும் பராங்குசநாயகி. மூன்றாமடி முழுதும் இழவுசொல்லுகிறது. இழந்த விழவுக்கு ஹேது சொல்லுகிறது நான்காமடி. பரமபதத்திலிருப்பை ஆசைப்பட்டேனல்லேன், நமக்குக் காட்சி தருகைக்கு வந்து நின்றவிடத்தே ஆசைப்பட்டடேனித்தனை, அதற்குப் பெற்றதண்டனை இது – என்றாளாயிற்று. (வெங்கட்பறவையின்பாகன்) பறவைக்கு “வெங்கண்“ என்று விசேஷணமிட்டதற்கு – அநுகூலமாகவொரு பொருளும் பிரதிகூலமாக வொருபொருளுமருளிச்செய்வர். கருத்மான் விரோதிகளின்மேலே வெவ்விய கண்களைச் செலுத்தி அவர்களை முடித்துப் பெருமானை இங்குக் கொணரவல்லவன், அவனிடத்துக் குறையில்லை என்பதாக முதற்பொருள். ஸம்ச்லேஷ தலையிலே பிரித்துக் கொண்டுபோமவனான வெவ்வியன் என்பதாக இரண்டாம்பொருள் தசையிலே பிரித்துக் கொண்டுபோமவனான வெவ்வியன் என்பதாக இரண்டாம்பொருள் * அக்ரூர க்ரூரஹ்ருதய* என்ற கோபிகளின் வார்த்தை இதற்குச் சார்பாகும்

English Translation

O Fair-bangled Sakhis, I am shamed by our wicked one, I look for words to speak, I find none to face you with, My bangles have slipped, my colour has faded, my breasts are sagging. I faint, Alas, I went after the Venkatam Lord who rides the fierce-eyed Garuda bird!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்