விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பெரிய அப்பனை பிரமன் அப்பனை*   உருத்திரன் அப்பனை*  முனிவர்க்கு 
    உரிய அப்பனை அமரர் அப்பனை*   உலகுக்குஓர் தனிஅப்பன் தன்னை*
    பெரியவண்குருகூர் வண்சடகோபன்*   பேணின ஆயிரத்துள்ளும்* 
    உரியசொல்மாலை இவையும்பத்துஇவற்றால்*   உய்யலாம் தொண்டீர்! நங்கட்கே  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பெரிய அப்பனை - எல்லாரினும் பெருமை பெற்றஸ்வாமியும்
பிரமன் அப்பனை - உலகங்களைப்படைத்தவனான பிரமனையும் படைத்தவனும்
உருத்திரன் அப்பனை - ஸம்ஹாரக்கடவுளாகிய ருத்ரனுக்கு தலைவனும்
முனிவர்க்கு உரிய அப்பனை - ஸநகர் முதலிய முனிவர்கட்கும் தகுதிவாய்ந்த ஸ்வாமியும்
அமரர் அப்பனை - ஸகல தேவர்களுக்கும் ஸ்வாமியும்

விளக்க உரை

இப்பதிகத்திற் சொன்ன பொருள்களையெல்லாம் சுருங்கச் சொல்லி இப்பதிகம் கற்றார்க்கு எம்பெருமானைப் பெற்று உஜ்ஜீவிக்கை எளிதாமென்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். உபயவிபூதிநாதனாய் நான்முகனுக்குத் தந்தையாய் உருத்திரனுக்கு நிர்வாஹகனாய் ஸநகஸநந்தநாதி மஹர்ஷிகளுக்கும் அஸாதாரண சேக்ஷியாய் மற்றுள்ள தேவர்களுக்குமப்பனாய், கிம் பஹுநா? ஸகல்லோகங்களுக்கும் ஏகநிர்வாஹகனான எம்பெருமானைக் குறித்து ஆழ்வார்ருளிச் செய்தவாயிரத்தில் இப்பத்துப் பாசுரங்களை யோதவே, நெடுநாள் பகவத்விஷய விமுகராய் விஷயாந்தரப்ரவணராய்ப் போந்த நமக்கும் உஜ்ஜீவிக்கப் பெறலாகுமென்றாராயிற்று.

English Translation

This decad of the thousand songs by great kurugur city's Satakopan on the Grand Father, -Brahma's father, Rudra's father, the Bard's father, the gods' father, and the sole father of the world, -Devotees! master it, you too can attain liberation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்