விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே*   நிகழ்வதோ நீ இன்னேஆனால்* 
    சிறந்தநின் தன்மை அதுஇதுஉதுஎன்று*  அறிவுஒன்றும் சங்கிப்பன்வினையேன்*
    கறந்தபால் நெய்யே நெய்யின்  சுவையே!*  கடலினுள் அமுதமே அமுதில்* 
    பிறந்த இன்சுவையே சுவையதுபயனே!*   பின்னைதோள் மணந்தபேர்ஆயா!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நெய்யின் இன் சுவையே -  நெய்யின் இனிமையான சுவைதானே வடிவெடுத்ததுபோன்றவனெ!
கடலினுள் அமுதமே - கடலில் தோன்றிய அமுதம் போன்றவனே!
அமுதில் பிறந்த இன் சுவையே - அமுதிலுள்ள இனிமையான சுவைதானே வெடுத்தவனே!கறந்த பால் - அப்போது கறந்தபால் போல் இனியனானவனே!
நெய்யே - அதில் ஸாரமான நெய் போன்றவனே!
நெய்யின் இன் சுவையே - நெய்யின் இனிமையான சுவைதானே வடிவெடுத்ததுபோன்றவனெ!
 

விளக்க உரை

எல்லா பொருள்களும் உனக்கு வடிவாய்க்கொண்டு சேஷமாய் நீயே அவற்றுக்கு ப்ரகாரியாய் – சேஷியாயிருக்கிறாயென்கிற அறிவு ஒன்று கொண்டு தரித்திருக்கிற நான் என்பாபத்தாலே அதிலும் அதிசங்கைபண்ண நேர்ந்துவிட்டதேயென்று நோகிறார். இறந்த காலத்திலுள்ளவையென்ன எதிர்காலத்திலுள்ளவையென்ன நிகழ்காலத்திலுள்ளவையென்ன ஆக முக்காலங்களிலுமுள்ள ஸகல பதார்த்தங்களும் நீயிட்டவழக்காகையாலே அவையெல்லாம் உனக்கு ப்ரகாரமாயிருக்கும், அவற்றுக்கு நீ ப்ரகாரியாயிருப்பாய், ஆகையாலே அவற்றுக்கு வந்தது உனக்குவந்ததாக நினைத்திருப்பாய் –என்கிறவிந்த வுணர்வுகொண்டு தரித்திருந்த வெனக்கு இந்த வுணர்வையும் நெகிழப்பண்ணா நின்றது உன்னைக் கிட்டப்பெறாத விழவு என்றுவாறு. சரீரத்திற்கு வரும் துக்கம் ஆத்மாவுக்கு ஆகிறாப்போலே எல்லாருடைய துக்கங்களும் சரீரியான வுன்னது என்கிற ஸம்பந்தஜ்ஞானமொன்றைக்கொண்டு ஜீவித்திருந்ததாகவும் இந்த ஸம்பந்தத்தைக்கொண்டு என்னை நீ நோக்கியருளவே வேணுமென்கிற பிரார்த்தனையிலே முடிந்துநிற்குமத்தனை. பின்னடிகளிரண்டும் எம்பெருமானுடைய பரமபோக்யதையைப் பேசுவன. இப்படிப்பட்ட போக்யதையையறிந்த நான் உன்னைவிட்டுத் தரிக்கவும் முடியவில்லையே யென்றவாறு. கறந்தபால்! என்பது தனிப்பட்ட விளி. கறந்தபோதே இயற்கையான ரஸத்தையுடைத்தான பால்போல் பரமபோக்யனே! என்றபடி. பாலின் ஸாரமான நெய்யே! நெய்யினுடைய இனி சுவைதானே வடிவெடுத்த தென்னலாம்படி. யுள்ளவனே!, கடலிடைத் தோன்றிய அமுதமே! அவ்வமுதத்தின் இனிமைதானே வடிவெடுத்ததென்னலாம்படியள்ளவனே! என்று இத்தனை சொல்லியம் த்ருப்தி பிறவாமையாலே பின்னைதோள் மணந்த பேராயா! என்று அவன் தன்னையே சொல்லித் தலைக்கட்டுகிறார். நப்பின்னைப் பிராட்டியும் நீயுமான சேர்த்திதானே ஸ்வயம் போக்யமன்றோ? இந்த போக்ய வமையிட்டுக் கூறவேணுமோ? என்றவாறு. நப்பின்னையை மணந்ததுபோல என்னையும் மணக்க ப்ராப்தியில்லையோ வுனக்கு என்ற கருத்துக்கொள்ளலாம்.

English Translation

O Lord who took Nappinnai's slender bamboo-soft arms in embrace! O Lord sweet as fresh milk and freshly churned butter! O Lord sweet as the ocean's ambrosia! O Past, present and Future! Alas, even I may begin to doubt that you are all these!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்