விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தீர்த்தனுக்கு அற்றபின்*  மற்று ஓர் சரண் இல்லை என்று எண்ணி*  தீர்த்தனுக்கே 
    தீர்த்த மனத்தனன் ஆகி*  செழுங் குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    தீர்த்தங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் வல்லார்களைத்,*  தேவர் வைகல் 
    தீர்த்தங்களே என்று பூசித்து நல்கி உரைப்பர்*  தம் தேவியர்க்கே. (2)   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தீர்த்தகங்கள் ஆயிரத்துள் - ஆயிரம் பாட்டும் ஆயிரம் தீர்த்தங்களென்னும் படியாக வுள்ளத்திலே
இவை பத்தும் வல்லார்களை - இப்பதிகத்தை ஓத வல்லவர்களைப் பற்றி
தேவர் - நித்யஸூரிகள்
வைகல் - எப்போதும்
தம் தேவியர்க்கு - தங்கள் மஹிஷிகளிடத்திலே

விளக்க உரை

இத்திருவாய்மொழியை ஒதுமவர்கள் நித்யஸூரிகள் போரவும் கௌரவிப்பர்களென்று அதனையே பலனாகக் கூறித்தலைக்கட்டுகிறார் ஆயிரம் பாசுரங்களும் ஆயிரம் தீர்த்தங்களாயிற்று. இந்தப் பதிகத்தை அப்யஸிக்கவல்லார்களை திருவடி திருவனநதாழ்வான் ஸேனைமுதலியார் தொடக்கமான நித்யஸுரிகள் ‘இவர்கள் பரம மவத்திரர்கள் என்று ஆதரித்துக் கொண்டு போந்து, தங்கள் மஹரிஷிகளை சொல்லிக களிப்பார்கள் என்றராயிற்று. திருவடியின் தேவிகள் ருத்ராஸூகீர்த்திகள்; ஸேனை முதரலிகளின் தேவிகள் ஸூத்ரவதி என்றிப்படி ப்ரஸிக்தமன்றோ; அவர்களைப் இங்குத் தம் தேவியா என்கிறது.

English Translation

This decad of the holly thousand songs by kurugur Satakopan of Saintly heart, on dedicating himself to the holy one's feet, - those who master it will secure the worship of the celestials and their spouses

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்