விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி*  அகல் இடம் முற்றவும் ஈர் அடியே* 
    ஆகும்பரிசு நிமிர்ந்த*  திருக்குறள் அப்பன் அமர்ந்து உறையும்* 
    மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடு*  மதிள் திருவாறன்விளை,* 
    மாகந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்து*  கைதொழக் கூடும்கொலோ!       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மிர்ந்த - இரண்டடியிலேயே அடங்கும்படி வளர்ந்தருளின
திரு குறள் அப்பன் - ஸ்ரீவாமனமூர்த்தி
அமர்ந்து உறையும் - விரும்பி வர்த்திக்குமிடமாய்,
மாகம் திகழ் - பெரிய ஆகாசத்தளவும் ஓங்கி விளங்குகிற
கொடி மாடங்கள் நீடு மதிள் - கொடிகட்டின மாடங்களையும் நெடிய திரு மதிள்களையுமுடைத்தான

விளக்க உரை

“ஆகும்கொல் ஜயமொன்றின்றி” என்கிறவிது ஆழ்வாருடைய மநோரதமாகவுமாம், திருக்குறளப்பனுடைய மசோரதமாகவுமாம். பாட்டின் முடிவிலே “கைதொழக் கூடுங்கொலோ” என்றிருப்பதனால் ‘ஆகுங்கொல் ஜயமொன்றின்றி’ என்பது புநருக்தமாகாதோ வென்னில், ஆகாது; முதலில் ஸாமாந்யமாக மநோரசித்து, மேலே விவரிக்கிறபடியென்று கொள்ளலாம். வாமநமூர்த்தியின் எண்ணமாக அந்வயிக்குமிடத்தில் இந்த சங்கைக்கே ப்ரஸக்தியில்லை. அகலிடம் முற்றவும் ஈரடியால் அளக்க ஆகுங்கொல்! என்கிற ஜயமின்றியே நிமிர்ந்து அளந்தானென்று கொள்க. மாகந் திகழ்-மஹாகம் என்கிற வடசொல் மாகம் என்று கிடக்கிறது. எம்பெருமான் திருவடிகளாலளந்த ஆகாசப் பரப்படங்கலும வியாபியாநின்றுள்ள கொடிகளையுடைத்தான மாடங்களையும் ஓங்கியிருந்துள்ள மதிட்களையுடைத்தான திருவாறன்விளையை சந்தந கர்ப்பூராதி ஸுகந்தத்ரவ்யவாஸிதமாய் ஹிமசீதளமான நீர் கொண்டு தூவி வலஞ்செய்து கைதொழும் பாக்கியம் வாய்க்குமோ! என்றாராயிற்று. மஹாகந்த மென்ற வடசொல் மாகந்த மென்று திரிந்தது. இந்த திவ்யதேசத்திற்கு மங்களாசாஸநார்த்தமாக எழுந்தருளும் பெரியயார்கள் ஆழ்வாருடைய இப்பாரிப்புக்கிணங்க ஸுகந்தசந்தனச் சேற்றைத் திருமதிளிலே தூவி வழிபாடு செய்வது வழக்கம்

English Translation

He came as a manikin and grew tall; dispelling doubts he grew and measured the Earth with his two feet. He resides in Tiruvaranvilal, where pennoned mansions touch the sky, When will I worship him with fresh water and folded hands?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்