- மேலும் பார்க்க
- மேலும் பார்க்க
விளக்கப்படம்
பாசுரம்
உதவிக் கைம்மாறு* என் உயிர் என்ன உற்று எண்ணில்,*
அதுவும் மற்று ஆங்கவன்* தன்னது என்னால் தன்னைப்,*
பதவிய இன்கவி* பாடிய அப்பனுக்கு,*
எதுவும் ஒன்றும் இல்லை* செய்வது இங்கும் அங்கே.
காணொளி
பதவுரை
என்னால் தன்னை பதவிய இன்கவி பாடிய அப்பனுக்கு -
என்னையிட்டுத் தனைனை மதுரமாகப பாடுவித்துக் கொண்ட எம்பிரானுக்கு
இங்கும் அங்கும் - உபயவிபூதியிலும்
செய்வது - செய்யக்கூடிய கைம்மாறு
எதுவும் ஒன்றும் இல்லை - மிக அற்பமானதுமில்லை.
விளக்க உரை
அவன் செய்த உபகாரத்துக்குப் பிரதி உபகாரமாக என்னுடைய உயிரை அவனுக்கு உரியது ஆக்கலாம் என்று பொருந்தி நினைத்தால் அந்த உயிரும் அவனுடையதே; ஆதலால், என்னைக் கொண்டு மிருதுவான இனிய கவிகளைத் தன்னைப் பாடிக்கொண்ட அப்பனுக்கு என்னால் செய்யத்தக்கது இவ்வுலகத்திலும் அந்த உலகத்திலும் யாது ஒன்றும் இல்லை.
English Translation
What can I give in return for his favour of singing with my tongue? I wonder! The songs in his praise are so moving, there is nothing of equal merit in this or another word.
முன் சந்தி ஆடியோ
....விரைவில்
பின் சந்தி ஆடியோ
....விரைவில்
குறிப்புகள்
....விரைவில்