விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அப்பனை என்று மறப்பன்*  என் ஆகியே,* 
    தப்புதல் இன்றி*  தனைக் கவி தான் சொல்லி,* 
    ஒப்பிலாத் தீவினையேனை*  உய்யக்கொண்டு* 
    செப்பமே செய்து*  திரிகின்ற சீர்கண்டே?  

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் ஆகியே - எனனைக் கொண்டே
தப்புதல் இன்றி - ஒருவகையான அவத்யமும் தட்டாதபடி
தனை தான் கவி சொல்லி - ஒப்பற்ற பாபியான என்னை
உய்ய கொண்டு -  உஜ்ஜீவிப்பிக்கத் திருவுள்ளம்பற்றி
செப்பமே செய்து திரிகின்ற - எனக்கு ரக்ஷ்ணமே பண்ணிக்கொண்டு போருகிற

விளக்க உரை

‘என்னைக் கருவியாகக்கொண்டு தவறுதல் இல்லாமல் தன்னையே தான் கவி சொல்லி, ஒப்பு இல்லாத தீய வினைகளையுடையேனான நான் உய்யும்படி அங்கீகரித்து. செவ்வையான காரியங்களையே செய்து போகின்ற சீலத்தைக் கண்டு வைத்தும், என் அப்பனை மறக்கப்போமோ?’ என்றபடி.

English Translation

Can I forget my father, who through my songs, has sung his own praise? He liberates me from beginningless Karma, and roams about ensuring my well-being

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்