விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்சொல்லி நிற்பன்*  என் இன் உயிர் இன்று ஒன்றாய்,* 
    என்சொல்லால் யான்சொன்ன*  இன்கவி என்பித்து,* 
    தன்சொல்லால் தான்தன்னைக்*  கீர்த்தித்த மாயன்,*  என் 
    முன்சொல்லும்*  மூவுருவாம் முதல்வனே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் இன் உயிர் - என்னுடைய ஹேயமான ஆத்ம வஸ்துவானது
இன்று ஒன்று ஆய் - இன்று தனக்கொரு வஸ்துவாத,
என் சொல்லால் யான் சொன்ன இன் கவி என்பித்து - என்னுடைய சொல்லாலே நான் கர்த்தாவாகச் சொன்ன இனிய பிரபந்த மென்று பிரபந்த மென்று நாட்டிலே பிரஸித்தமாக்கி
தன் சொல்லால் - தன்னுடைய உக்திகளாலே
தான் தன்னை கீர்த்தித்த - தானே தன்னைக் கவிபாடிக் கொண்டவனாய்

விளக்க உரை

என்னுடைய இனிய உயிரானது இன்று ஒரு பொருளாகும்படி, என் சொல்லால் யான் சொன்ன இனிய கவி என்பதாகப் பிரசித்தமாக்கித் தன் சொல்லால் தானே தன்னைப் புகழ்ந்து பாடிய ஆச்சரியத்தையுடையவனும், எனக்கு முன்னே சொல்லுகின்ற, மும்மூர்த்திகளின் உருவமாய் இருக்கிற முதல்வனுமான எம்பெருமானை எந்தக் காரணத்தைச் சொல்லித் தரித்திருப்பேன்?

English Translation

Today he has rendered my sweet soul count worthy, Making it appear like I was singing with words mine, he with words his, has sung his praise, what a wonder!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்