விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்ன இயற்கைகளால்*  எங்ஙனே நின்றிட்டாய் என் கண்ணா?,*
    துன்னு கரசரணம் முதலாக*  எல்லா உறுப்பும்,* 
    உன்னு சுவை ஒளி*  ஊறு ஒலி நாற்றம் முற்றும்நீயே,* 
    உன்னை உணரவுறில்*  உலப்பு இல்லை நுணுக்கங்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் கண்ணா - எனது கண்ண பிரானே!
என்ன இயற்கைகளால் எங்ஙனே நின்றிட்டாய் - என்ன் ஸ்வபாவங்களோடே என்ன ப்ரகாரத்திலே நின்றாய்;
துன்னு கரம் சரணம் முதல் ஆக - நெருங்கிய கரசரணாதிகளான
எல்லா உறுப்பும் - எல்லாக்கரணங்களும்
உன்னு - விரும்பத்தக்க

விளக்க உரை

‘என் கண்ணா! எவ்வகையான இயற்கைகளோடு கூடி என்ன பிரகாரத்தால் நிற்கிறாய்? செறிந்திருக்கின்ற கை கால் முதலான எல்லா அவயவங்களும் நீயே; நினைக்கப்படுகின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று சொல்லப்படுகிற புலன்கள் முழுதும் நீயே; உன்னை அறியல் உற்றால் நுணுக்கங்கள் எல்லை இல்லாதவனாய் இருக்கின்றனு,’ என்க.

English Translation

O My Krishna! you are the hands and feet and all the lirnbs, taste and form and touch; sound and smell too are you. Begin to think, there is no end to your subtle nature. What do these mean? How do you stand?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்