விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    பாசங்கள் நீக்கி*  என்னை உனக்கே அறக் கொண்டிட்டு,*  நீ 
    வாச மலர்த் தண் துழாய்முடி*  மாயவனே! அருளாய்,*
    காயமும் சீவனும் ஆய்*  கழிவு ஆய் பிறப்பு ஆய் பின்னும்நீ,* 
    மாயங்கள் செய்துவைத்தி*  இவை என்ன மயக்குக்களே!       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நீ - இப்படிப்பட்ட நீ,
என்னை பாசங்கள் நீக்கி - எனக்குத் தகாத விஷயஸங்கங்களேக் கழித்து
உனக்கே அற கொண்டிட்டு - உனக்கே அற்றுத் தீரும்படி அங்கீகரித்து வைத்து
காயமும் சீவனும் - பந்தமான சரீரமும் பத்த ஜீவனும்
கழிவு பிறப்பு ஆய் - இவற்றுக்கு வரக்கூடிய விநாசமும் உத்பத்தியும் நீயிட்ட வழக்காம்படியாயிருக்க,

விளக்க உரை

‘சரீரமும் ஆத்துமாவுமாகியும். இறப்பாகிப் பிறப்பாகியும் இருக்கின்ற வாசனை பொருந்திய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயினைத் தரித்த திருமுடியையுடைய மாயவனே! நீ என்னுடைய பாசங்களை எல்லாம் நீக்கி என்னை உனக்கே அடிமையாகக் கொண்டும், அதற்கு மேலே நீ இச்சரீரத்தோடே பொருத்தி வைத்திருக்கின்றாய்; இவை என்ன மயக்கங்கள்? அருளிச்செய்ய வேண்டும்’ என்கிறார்.

English Translation

Fragrant-Tulasi-blossom-Lord! Pray tell me. You rid me of my desires and took me as your own; body, breath, birth and death are you. The many wondrous acts are yours, what deceptions are these?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்