விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அங்கண்  மலர்த் தண் துழாய்முடி*  அச்சுதனே! அருளாய்,* 
    திங்களும் ஞாயிறும் ஆய்*  செழும் பல் சுடர் ஆய் இருள் ஆய்,* 
    பொங்கு பொழி மழை ஆய்*  புகழ் ஆய் பழி ஆய் பின்னும்நீ, 
    வெங்கண்வெங் கூற்றமும் ஆம்*  இவை என்ன விசித்திரமே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அச்சுதனே - எம்பெருமானே!
அருளாய் நீ - அருளிச்செய்யவேணும்;
திங்களும் ஞாயிறும ஆய் - சந்திரனும் ஸூர்யனுமாயும்
செழு பல் சுடர் ஆய் - லிலக்ஷ்ணமாயும் பலவாயுமுள்ள நக்ஷ்த்திரங்களாயும்
இருள் ஆய் - இருளாயும்

விளக்க உரை

அழகிய தேனோடு கூடிய மலர்களையுடைய குளிர்ந்த திருத்துழாயை முடியிலேயுடைய அச்சுதனே! சந்திரனும் சூரியனுமாகி அழகிய பல வகையான நக்ஷத்திரங்களாகி இருளாகியும், மிகுதியாகப் பெய்கின்ற மழையாகிப் புகழாகிப் பழியாகி. அதற்கு மேலே தறுகண்மையும் கொடுமையுமுடைய யமனுமாய் இருக்கின்ற இவை என்ன ஆச்சரியம்! அருளிச்செய்வாய்.

English Translation

Beautiful Tulasi-wreathed Lord, Achyuta! Pray tell me! You are the Moon, The sun, the stars, darkness and thundering rain. Great fame, blame, and the sinister-eyed god of death are also. you: what wonders are these?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்