விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஆட்டியும் தூற்றியும் நின்று*  அன்னைமீர் என்னை நீர்நலிந்துஎன்?* 
    மாட்டு உயர் கற்பகத்தின்* வல்லியோ? கொழுந்தோ? அறியேன்,*
    ஈட்டிய வெண்ணெய்உண்டான்* திருமூக்கு எனதுஆவியுள்ளே,* 
    மாட்டிய வல்விளக்கின்* சுடராய்நிற்கும் வாலியதே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறியேன், - அறிகின்றிலேன்;
ஈட்டியவெண்ணெய் உண்டான் திருமூக்கு - திரட்டி வைத்திருந்த வெண்ணெயை (க்களவு வழியாலே) அமுது செய்த கண்ணனுடைய திருமூக்கானது
எனது ஆவி உள்ளே - எனது நெஞ்சினுள்ளே
மாட்டிய - ஏற்றிய
வாலியது வல் விளக்கின் சுடர் ஆய் நிற்கும் - பெருத்து ஸ்திரமான தீப ஜ்வாலே போலே விளங்காநின்றது.

விளக்க உரை

 தாய்மார்களே1 நீங்கள், என்னை வருத்தியும் பழி மொழிகளைக் கூறியும் நின்று நலிவதனால் பயன் யாது? திரட்டிய வெண்ணெய் உண்டவனான கிருஷ்ணனது அழகிய மூக்கானது, பக்கத்தில் உயர்ந்து விளங்குகின்ற கறபகத்தின் கொடியோ? அல்லது, கொழுந்தோ? அறியேன்; அது, என்னுடைய உயிருக்குள்ளே ஏற்றிய வலிய விளக்கினது சுடராய் நிற்கும் பெருமையையுடையது.

English Translation

O Ladies, what use punishing me with nudges and abuse? Is it a tendril or stem of a grown Kalpa creeper?, I know not, -the beautiful nose of the thief-Lord enters my soul, strongly like a radiant lamp hanging on a chain

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்