விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    எங்குத் தலைப்பெய்வன் நான்?*  எழில் மூவுலகும் நீயே,* 
    அங்கு உயர் முக்கண்பிரான்*  பிரம பெருமான் அவன்நீ,*
    வெங்கதிர் வச்சிரக் கை*  இந்திரன் முதலாத் தெய்வம்நீ,*
    கொங்குஅலர் தண்அம் துழாய்முடி*  என்னுடைக் கோவலனே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

எழில் மூ உலகும் நீயே - விலக்ஷ்ணமான மூவுலகமும் நீயிட்ட வழக்காயிருக்கும்,
அங்கு உயர் முக்கண் பிரான் - அந்த லோகத்திலே உயர்ந்தவனான சிவ பிரானும்
பிரமன் பெருமான் அவன் - அப்படிப்பட்ட நான் முகக்கடவுளும்
நீ - நீயிட்ட வழக்காயிருப்பர்கள்.
வெம் கதிர் வச்சிரம் கை இந்திரன முதலா தெய்வம் நீ - வெவ்விய பிரதாபம் பொருந்திய வஜ்ராயுதத்தைக் கையிலேயுடைய இந்திரன் முதலான தெய்வங்களும் நீயிட்ட வழக்கே;

விளக்க உரை

ஸர்வஸ்மாத்பரனாய் ஆசரிதபவ்யனாய் போக்யதை அளவிறந்திருப்பவனானவுன்னை அகிஞ்சநனான நான் எங்கே கிட்டுவதென்கிறார். எழில் மூவுலகும் நீயே-உலகத்தில அவ்வோபதார்த்தங்களுக்குள்ள உயர்த்தியெல்லாம் நீயிட்ட வழக்கு என்றபடி. இப்படியே மேலடிகளிலும் கொள்க. முக்கண்ணனுக்குள்ள ஏற்றமும் பிரமனுக்குள்ள எற்றமும் இந்திரனுக்கும் அவனைச் சேர்ந்த மற்றுமுண்டான தேவர்களுக்குமுள்ள எற்றமுமெல்லாம் நீயிட்ட வழக்கென்றபடி. பிரமன் சிவனிந்திரன் முதலானார்க்குண்டான ஜச்வரியமெல்லாம் பிரானே! உன்ன தீனமாக வன்றா விருப்பது; அப்படிப்பட்ட நீ என்னுடைய பிரதிபந்தகங்களையும் போக்கி என்னை யுன்திருவடிகளிலே சேர்த்தருளவேணுமென்று கருத்து.

English Translation

O My Gopala, wearing a honey-dripping cool Tulasi wreath! You are the three fair worlds. The three-eyed Siva is you, the Lord Brahma too is you. The thunderbolt-Indra and all the other gods are you. Where am I to meet you?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்