விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  மன்னுநரகன்தன்னைச்*  சூழ்போகிவளைத்துஎறிந்து* 
  கன்னிமகளிர்தம்மைக்*  கவர்ந்தகடல்வண்ணன்மலை*
  புன்னைசெருந்தியொடு*  புனவேங்கையும்கோங்கும்நின்று* 
  பொன்அரிமாலைகள்சூழ்*  பொழில்மாலிருஞ்சோலையதே.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கன்னி மகளிர் தம்மை - (பதினாறாயிரத் தொருநூறு) கன்னிகளையும்
கவர்ந்த - தான் கொள்ளைகொண்ட
கடல்வண்ணன் - கடல்போன்ற நிறமுடையவனான கண்ணபிரான் (எழுந்தருளியிருக்கிற)
மலை - மலையாவது:
புன்னை- புன்னைமரங்களும்

விளக்க உரை

ஆள் வலியாலும் தோள் வலியாலும் நமக்கு ஓரழிவுமில்லையென்று உறுதியாக நினைத்து அஹங்காரியாயிருந்த நரகாஸுரன், தேவர்களை அடர்த்தும், தேவமாதரைப் பிடித்தும், அதிதியினுடைய குண்டலங்களைப் பறித்தும், இங்ஙனொத்த கொடுமைகளாலே தேவர்களைக் குடியிருக்காலொட்டாதபடி பல பீடைகளைச் செய்ய, தேவேந்திரன் த்வாரகையிற் கண்ணனிடத்துவந்து ‘இவனை கிரஸிக்கவேணும்’ என்று வேண்டிக்கொள்ள, பின்பு கண்ணபிரான் அவனைக் கொல்லும் வகைகளை ஆராய்ந்து, ஸத்யபாமைப் பிராட்டியோடே கூடப் பெரிய திருவடியை மேற்கொண்டு, அவ்வஸுரனது இருப்பிடமாகிய பிராக்ஜோதிஸபுரத்துக்கு எழுந்தருளி, தனக்குத் தப்பிப்போகவொண்ணாதபவடி அவளை வளைத்துக்கொண்டு, திருவாழியாழ்வானைப் பிரயோகித்து, உயிர்தொலைத்திட்டு, நெடுங்காலமாய்த் தான் மணம் புனரவேண்டுமென்று மந்தரகிரியினுடைய சிகரமான இரத்தினபுரியிற் பல திசைகளிலிருந்துங் கொணர்ந்து சிறை வைக்கப்பட்ட கன்னிகைள் பதினாறாயிரத்தொருநூற்றுவரையும் கண்ணபிரான் தான் கைக்கொண்ட வரலாஙிறு, முன்னடியில் அடங்கியது. சூழ்போகுதல்- சூழ்ச்சி; அதாவது, ஆராய்ச்சி வளைத்தல்- போக்கறுத்தல். புன்னை, செருந்தி, வேங்கை, கோங்கு என்ற இம்மரங்களின் பூக்கள் பொற்கென்ற நிறம் பெற்றிருக்கும்; அப்படிப்பட்ட பூக்கள் நிறைந்த மரங்கள் இத்திருமலையில் ஒழுங்குபட நிற்பது- மலைக்குப் பொன்னரிமாலை என்னும் ஆபரணம் ஸமர்ப்பிப்பது போன்றுள்ளதென்ற உதயரேக்ஷை, பின்னடிகளும் குக்கருத்து பொன்னரிமாலை என்பது- பொன்னாற்செய்யப்பட்ட ஒரு ஆபரண விசேஷம்.

English Translation

Planning ways to destroy the strong Narakasura, and then throwing a noose around him, the ocean-hued Lord killed him and released the sixteen thousand one hundred maidens held in captivity. His hill abode in Malirumsolai where Punnai, Srundi, Vengai and Kongu trees deck the groves with golden charm-necklaces.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்