விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என்றுகொல் சேர்வது அந்தோ*  அரன் நான்முகன் ஏத்தும்,*  செய்ய 
    நின் திருப்பாதத்தை*  யான்நிலம் நீர்எரி கால்,*  விண்உயிர்
    என்றுஇவை தாம்முதலா*  முற்றுமாய் நின்ற எந்தாய்யோ,*
    குன்றுஎடுத்து ஆநிரை மேய்த்து*  அவை காத்த எம்கூத்தாவோ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முற்றும் - ஸகல பதார்த்தங்களும்
ஆய் நின்ற எந்தாய் ஒ - தானே யென்னலாம் படி நின்ற ஸ்வாமியே!
ஆ நிரை மேய்தது - பசுக்களின் கூட்டங்களை மேய்த்து
குன்று எடுத்து அவை காத்த - கோவர்த்தன மலையைக் குடையாக வெடுத்து அப்பசுக்களை ரக்ஷித்தருளின
எம் கூத்தா ஓ - குடக்கூத்து முதலிய கூத்துக்களில் வல்லவனான எம்பெருமானே!
அரண் நான் முகன் ஏத்தும் - சிவனும் பிரமனும் துதிக்கும்படியான

விளக்க உரை

மீண்டும் அதுவே வாய்வெருவுதலாய்ச் செல்லுகிறார். கீழ்ப்பாட்டில் ‘என்றுகொல்சேர்வது’ என்றாரே; அதற்கு ஒரு மறுமாற்றம் பெற்றிலர். அத்தோடு அந்தோ என்பதையுங் கூட்டியழுகிறார். நான் மூடிந்ததென்கிறார். திருவடிக்கு ‘அரண் நான்முகனேத்தும்’ என்ற அடைமொழி கொடுத்தது அவர்கள் துதிப்பதனால் திருவடிக்கு ஒரு பெருமை என்கைக்காகவன்று; அழிப்பதும் ஆக்குவதுமே தொழிபாயிருக்கின்ற அவர்களுங்கூட ஆசைப் படுந்திருவடியன்றோ; நான் ஆசைப் படச்சொல்லவேணுமோ வென்றவாறு. அவர்கள் ஏத்துவது ப்ரயோஜநாந்தரத்துக்காக; நான் ஏத்துவது ஸ்வயம் ப்ரயோஜநமாக என்றுணராய். நில நீரொஜீகால் என்று தொடங்கி, சேதநாசேதநாத்மகமான ஸமஸ்தவஸ் துக்களுக்கும் ஆத்மாவாயிருப்பவனே! என்கிறார். பிரானே! உலகில் எப்பொருளைக்கண்டாலும் அவற்றை நீயாகவே நினைத்து மகிழ்ச்சி கொள்ளும்படியானவனே நான்; ஆயினும் அஸாதாரணமான வுன் திருவடிகளைப் பெற்றாலல்லது என் ஆசை தீராதேயென்று காட்டுகிறபடி. குன்றெடுத்து ஆநிரைமேய்த்து அவைகாத்த—ஆநிரைமேய்க்கைக்காகக் குன்றெடுக்க வேண்டிய அவசியமில்லையாதலால், ‘ஆநிரைமேய்த்து குன்றெடுத்து அவை காத்த’ என்று யோஜித்துக்கொள்வது.

English Translation

Alas, when am I to join your red lotus feet, fittingly worshipped by Siva and Brahma? O Lord who stands as Earth, Fire, water. Wind and sky! O My Dancer-Lord who protected the cows under a mount!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்