விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வண்டு அமர் பூங்குழல்*  ஆய்ச்சி மகனாகக்* 
  கொண்டு வளர்க்கின்ற*  கோவலக் குட்டற்கு*
  அண்டமும் நாடும்*  அடங்க விழுங்கிய* 
  கண்டம் இருந்தவா காணீரே* 
  காரிகையீர்! வந்து காணீரே

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

வண்டு அமர் - வண்டுகள் படிந்திருக்கிற;
பூ குழல் - பூ அணிந்த குழலையுடையளான;
ஆய்ச்சி - யசோதைப்பிராட்டியானவள்;
மகனாக கொண்டு - (தன்) புத்ரனாகஸ்வீகரித்து;
வளர்க்கின்ற - வளர்க்கப்பெற்றவனாய்;

விளக்க உரை

உரை:1

அழகிய பூக்களைச் சூடியதால் வண்டுகள் என்றும் நிலைத்து வாழும்படியான குழலை உடைய அசோதைப் பிராட்டியார் 'தன் மகன்' என்று மிகவும் அன்புடன் வளர்த்து வருகின்ற கோபாலச் சிறுவனுக்கு, அண்டங்களையும் நாடுகளையும் அவற்றுள் நிலைத்த அனைத்துப் பொருட்களையும் உயிர்களையும் எல்லாவற்றையும் விழுங்கிய திருக்கழுத்து இருக்கும் அழகைக் காணுங்கள். அழகிய பெண்களே வந்து காணுங்கள்.

உரை:2

பிள்ளைகளுக்கு அனுக்கம் உண்டாகாமைக்காகத் தாய்மார் தங்களை அலங்கரித்துக் கொண்டிருப்பர்களாகையாலே ‘வண்டமர் பூங்குழலாய்ச்சி’ எனப்பட்டது. யசோதையானவள் கண்ணபிரானைத் தன் மகனென்றே நினைத்திருந்தாலும் ஆழ்வார் உண்மையை அறிந்தவராதலால் மகனாகக் கொண்டு வளர்க்கின்ற என்றார். அண்டமும் நாடு மடங்க விழுங்கியது - பிரளயகாலத்தில் ‘அண்டாண்ட பகிரண்டத்தொருமாநில மெழுமால்வரை முற்றுமுண்ட கண்டம்’ என்றார் திருப்பாணாழ்வாரும். கண்டம் - வடசொல்.

English Translation

O Beautiful Ladies, come here and see. The cowherd-child whom the bee-humming flower-coiffured dame Yasoda brings up as her own son, swallowed the Universe and all the worlds in it. O, see his beautiful neck.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்