விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மேய்நிரை கீழ்புக*  மாபுரள,*  சுனை 
    வாய்நிறை நீர்*  பிளிறிச்சொரிய,*  இன
    ஆநிரை பாடி*  அங்கேஒடுங்க,*  அப்பன் 
    தீமழை காத்து*  குன்றம் எடுத்தானே     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

சுனைவாய் நிறை நீர் - சுனைகளினுடைய வாயளவும் நிறைந்த நீரானது
பிளிறி சொரிய - பெரிய ஆரவாரத்தோடு சொரியும் படியாகவும்
இனம் ஆநிரை பாடி அங்கே ஓடுங்க - மிகவும் ஸம்ருத்தமான திருவாய்ப்பாடியானது அங்கே அடங்கும்படியாகவும்
அப்பன் - கண்ணபிரான்
தீ மழை காத்து - விநாச ஹேதுவான மழையைத் தடுக்க

விளக்க உரை

திருவாய்ப்பாடியில் ஆயர்கள் வழக்கப்படி இந்திரபூஜைக் கென்று சமைத்தசோறு முதலியவற்றையடங்கலும் கண்ணபிரான் அவ்விந்விந்திரனுக்கு இடவொட்டாமல் கோவர்த்தன மலைக்கு இடுவித்துப் பின்பு தானே ஒரு தேவதாரூபங்கொண்டு அவற்றை முற்றும் அமுது செய்துவிட, பிறகு இந்திரன் பசிக்கோபத்தினால்; மேகங்களை ஏவி ஏழுநாள் விடாமழை பெய்விக்க, கண்ணபிரான் அக் கோவர்த்தனகிரியைக் குடையாகத் தூக்கிக் கோக்களையும் கோவலரையும் காத்தருளின் னென்றவரலாறு ப்ரஸித்தம். அப்போதைய நிலைமையை இப்பாட்டில் அநுபவிக்கிறார். மேய்கின்ற பசுக்களானவை புல்லும் உமிழாதே அசையிட்டுக் கொண்டு கீழே புகவும், மலைமேலுள்ள மிருகங்களெல்லாம் மலைகுடையாகக் கவிழ்ந்தபடியடிலே கீழே புரண்டு விழவும், சுனைகள் வாயளவும் நிறைந்த நீரைப் பெரிய கோஷத்தோடு சொரியவும், திருவாய்ப்பாடியடங்களிலும் அங்கே யொடுங்கவும் அப்பன் தீமழை காத்துக் குன்றமெடுத்தா னென்றதாயிற்று.

English Translation

Herds of grazing cows and all animals couched under; the great tanks overflowed with gurgling waters. The entire cowherd-clan found a shelter when my Father lifted a mount and stopped the bad rains!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்