விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    சேர்வன்சென்று என்னுடைத்தோழிமீர்காள்!*  அன்னையர்காள்! என்னைத்தேற்ற வேண்டா,* 
    நீர்கள் உரைக்கின்றது என்இதற்கு?*  நெஞ்சும் நிறைவும் எனக்குஇங்குஇல்லை,*
    கார்வண்ணன் கார்க்கடல் ஞாலம் உண்ட*  கண்ண பிரான்வந்து வீற்றிருந்த,* 
    ஏர்வள ஒண்கழனிப் பழன*  தென்திருப்பேரெயில் மாநகரே. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்னையர்காள் - (அப்படிப்பட்ட) தாய்மார்களே!
என்னை தேற்றவேண்டா - (எல்லை கடந்த) என்னைத் தேற்றுவதில் நீங்கள் முயல வேண்டா
இதற்கு - எனது இந்த நிலைமைக்கு
நீர்கள்  உரைக்கின்றது என் - நீங்கள் சொல்லக்கூடிய வார்த்தை என்ன இருக்கிறது?
எனக்கு நெஞ்சும் நிறைவும் இங்குஇல்லை - எனது நெஞ்சும் அடக்கம் முதலிய குணங்களும்; இங்கில்லை யன்றோ;

விளக்க உரை

‘சேர்வன் சென்று’ என்றதையே இங்கு மீண்டும் அநுபாஷித்திருக்கையாலே தோழிமாரும் தாய்மாரும் அதை ஆசேஷபித்துக் கூறினமை புலப்படும் என்னுடையத் தோழிமீர்கள் அன்னையர்காள் என்றது—சேஷபித்துச் சொல்லுகிறபடி. நீங்கள் எனக்குத் தோழிமாராகவும் தாய்மாராகவும் வாய்த்தது அழகிதாயிருந்தது!. இதுவோ நீங்கள் எனக்கு ப்ரியமும் ஹிதமும் பார்ப்பது! என்று சேஷபிக்கிறபடி. என்னைத் தேற்றவேண்டா என்கையாலே அவர்கள் இவளைத்; தேற்றினது தெரிகின்றது; ‘அம்மா! நீ இங்ஙனம் பதறலாகாது, வருந்தலாகாது, அவன் தானே சடக்கென வருவான்காண்; வந்தபோது ஸேவிக்கப்ராப்தமென்றிருப்பதன்றோ தகுதி’ என்றிங்ஙனே பல சொல்லித் தேற்றினார்கள் போலும்; இங்ஙனே தேற்றுதல் வேண்டாவென்கிறாளாயிற்று. நானோ திண்ணிய அத்யவஸாய முடையவள்; என் திறத்தில் அறிவிலிகளான உங்களது பேச்சு பயன்படாதென்றவாறு. இதற்கு நீர்களுரைக்கின்றதென்? என்னுடைய நிலைமை உங்கட்குத் தெரியாமையில்லையே; எப்படிப்பட்ட நிலைமைக்கு எப்படிப்பட்ட வார்த்தை சொல்ல வேணுமென்பதுங்கூட அறியாத நீங்கள் அந்தோ! என் சொல்லுகிறீர்கள்? என்கிறாள். நீங்கள் சொல்லுமதைக் கேட்பதற்கு நெஞ்சு வேணுமே; மநஸ்ஸஹகாரமில்லாதவர்க்கு நீங்கள் பேசி என்ன பயன்? என்னெஞ்சு எங்கே புக்கதோ அங்கே போய்ச் சொல்லுங்கோளென்கிறாள். அம்மா! நெஞ்சு இங்கில்லை யென்கிறாயே, நெஞ்சில்லையாகில் இந்த வார்த்தை தானும் நீ சொல்லமுடியாதன்ளோ; எங்களைக் கண்டித்து நீ வார்த்தை சொல்லும் போதைக்கு நெஞ்சு உடனிருந்துதானே யாகாவேண்டும் என்று அவர்கள் சொல்ல, நிறைவு எனக்கில்லை என்கிறாள். அடக்கம் குடிபோயிற்றென்கை. உங்களொடு பேசுவதற்குரிய நெஞ்சு இருந்தாலும் உங்கள் பேச்சைக் கேட்பதற்குரிய நெஞ்சு வேறு, பேசு கைக்குரிய நெஞ்சு இருந்தாலும் உங்கள் பேச்சுக் கேட்கைக்குரிய நெஞ்சு இல்லை காண்மினென்கிறான் என்றுங்கொள்க. நெஞ்சும் நிறைவும் போனவிடம் சொல்லுகிறது பின்னடிகளில். கார்வண்ணன் என்பதற்து நம்பிள்ளையீடு; “தாய்மார் தோழிமாரானவர்கள் வார்த்தை கேளாதபடியாம் வடிவு படைத்தவன்” என்று. அப்பெருமானது திருமேனி நிறத்தில் நான் ஈடுபட்டவளாதலால் உங்கள்பேச்சு கேட்கமாட்டே னென்றவாறு. வெறும் வடிவழகுமாத்திரமே யல்ல; ஆபத்து வந்தால் ரக்ஷித்து விடுமவன் என்கிறது கார்க்கடல் ஞாலமுண்ட என்பதானால். இப்படிப்பட்ட எம்பெருமான் தன் பெருமையெல்லாம் தேற்றவந்து எழுந்தருளியிருக்குமிடமான நீர் நிலவளம் மிக்க திருப்பேரெயிலாகிற மாநகரிலே சென்று சேர்வேனத்தனை; உங்கள் தடைக்கு மீளமாட்டேன், அவ்வழியிலும் நிற்கமாட்டேன் என்றாளாயிற்று.

English Translation

My Sakhis! I myst go. O Ladies, pray do not stop me, of what use is this? I have no contentment of heart anymore. My Lord of dark ocean-hue, Lord who swallowed the Earth and Ocean resides in Tiruppereyil surrounded by fertile fields

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்