விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வெள்ளைச் சுரிசங்கொடு ஆழி ஏந்தி*  தாமரைக் கண்ணன்என் நெஞ்சினூடே,* 
    புள்ளைக் கடாகின்றஆற்றைக் காணீர்*  என்சொல்லிச் சொல்லுகேன் அன்னைமீர்காள்,*
    வெள்ளச் சுகம்அவன் வீற்றிருந்த*  வேத ஒலியும் விழா ஒலியும்,* 
    பிள்ளைக் குழா விளையாட்டுஒலியும்  அறா*  திருப்பேரெயில் சேர்வன் நானே!  (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தாமரைக் கண்ணன் - செந்தாமரைக் கண்ணனான பெருமான்
என் நெஞ்சின் ஊடே - எனது நெஞ்சினுள்ளே
புள்ளே கடாகின்ற ஆற்றை - நடத்துகிறபடியை
காணீர் - நீங்கள் அறிகினறீர்களில்லையே!
என்சொல்லி சொல்லு கேன் - இவ்வநுபவத்துக்கு என்ன பாசுரமிட்டு நான் சொல்லுவேன்;

விளக்க உரை

பராங்குசநாயகியானவள் தனது உள்ளத்தினுள்ளே ஒரு பெரியதிருவடித் திருநாள் நடந்து செல்லுகிறபடியை பேசி, தென்திருப்ப பேரையிலே போகவேணுமென்று தனக்குப் பிறந்த துணிவைத் தாய்மாரிடம் கூறுகின்றான். கீழ்த்; திருவாய்மொழியில் இவள் சங்குசக்கரங்களென்று கைகூப்பும் என்று திருவாழி திருச்சங்கிலே பாவபந்த் காட்டினபடியாலும், தாமரைக்கண்ணெற்றே தளரும் என்று தாமரைக் கண்களிலே யீடுபாடு காட்டினபடியாலும் அந்த திவ்யாயுதங்களை ஏந்திக்கொண்டு வாத்யா வ்யாலோலத் கமல தடாக தாண்டவேந (ஸ்ரீரங்கராஜஸ்தவம். 2—59) என்றும் வன்காற்றறைய வொருங்கே மறிந்து கிடந்தலர்ந்த மென்காலகமலத் தடம்போல பொலிந்தன—எம்பிரான தடங்கண்களே என்றும் பேசலாம்படியாக திருக்கண்ணழகுடனே வந்து உள்ளே காட்சி தந்தனன்போலும்; அது முதலடியில் பேசப்படுகிறது. கீழே முகில் வண்ணனென்று ப்ரஸ்தாவித்தான்; அது முதலடியில் பேசப்படுகிறது. கீழே முகில் வண்ணதென்று ப்ரஸ்தாவித்தான்: அந்த நிறத்துக்குப் பரபாகமான வெளுப்பையுடைத்தான சங்கையும், ஒரு விசேஷணமிட்டுச்சொல்லவேண்டாத படியான அழகையுடைத்தான திருவாழியையு மேந்திக்கொண்டு தாமரைக் கண்கள் பிறழவந்து பெரியதிருவடி திருந்தோளிலே யேறிச் சாரிகை வந்து என்னெஞ்சினுள்ளே யுலாவுகிறபடியைக் காணுங்கோளென்கிறாள். என்சொல்லிச் சொல்லுசேன்-என்ன பாசுரமிட்டு எத்தைச் சொல்லுவது என்கை. உங்கள் கண்ணுக்கு இலக்காகாதாப்போலே என் வாக்குக்கும் இலக்காகிறதில்லையே! என்கிறாள். “புள்ளைக் கடாகின்றவாற்றைக் காணீர்” என்று பேசியாயிற்றே; இன்னமும் பேசவேண்டியது என்ன இருக்கிறதென்னில்; அதைப்பற்றி ஒரு மஹபாரதம் பேசவேண்டாவோ? அது மாட்டுகிறிலே னென்கிறாள். இனித் தான் செய்ய நினைத்த காரியத்தைப் பின்னடிகளிலே கூறுகின்றாள். வேதவொலியும் விழாவொலியும் பிள்ளைக்குழாவிளையாட்டொலியும் நிரந்தரமாகச் செல்லாநிற்கிற திருப்பேரையிலே சென்று சேர்வதே என்னுடைய பணியென்கிறாள். ‘வெள்ளச்சுக்கமவன்’ வெள்ளைச் சுகமவன்’ என்று இருவகையான பாடங்களையும் ஆசிரியர் திருவுள்ளம்பற்றுகிறார். முந்தின பாடத்தில் சுக வெள்ளத்தை யுடையவன் என்று பொருள். ஆனந்தவெள்ளத்தைத் தானுடையவன். (அல்லது) அதைஎனக்கு அளித்தவன் என்க. பிந்தின பாடத்தில் வெள்ளை யென்றது-மறுவற்ற என்றபடி. துன்பங் கலசாத இன்பமாயிப்பவனென்றவாறு. பிள்ளைக்குழாவிளையாட்டொலியுமறா என்றது இத்திருப்பதிக்குச் சிறப்பான தொரு விசேஷணம். சிறுபிள்ளைகள திரண்டு விளையாடுவதென்பது எங்குமுண்டு; இவ்வூரில் அப்பிள்ளைகள் விளையாடுவது கோயில் திருமுன்பேயாயிருக்கும். எம்பெருமான் தானும் அந்த விளையாட்டின் சுவையைக்காண ஆசைப்பட்டானாம்: எதிரே பெரியதிருவடி ஸன்னிதியிருந்து இடைச்சுவராயிருந்தபடியாலே அந்த விளையாட்டைக்காண மறைவாயிருக்கிறதே யென்று வருந்தி ‘கருடா! அப்பால் போ’ என்று பெருமாள் வெறுத்துரைத்தாராம். இந்த நிலைமை நாளைக்குங் காணலாம். இந்த திவ்ய தேசத்தில் திருநாமத்தைப் பற்றினவொரு ஆராய்ச்சி;- இப்பதிகத்தில் பாட்டுத்தோறும் தென் திருப்பேரை என்றே பல புத்தங்களிற பதிப்பித்திருக்கக் காண்கிறோம். இத்தலத்தின் ஒன்பதாவது பாட்டில் ஏர்வளவொண் கழனிப்பழனத் தென் திருப்பேரெயில் மாநகரே என்றிருப்பதும், அங்கு வியாக்கியானங்களில் “திருப்பேரெயிலாகிற மாநகரிலே” என்று வ்யத்தமாக அருளிச் செய்யப்பட்டிருப்பதும் காணத்தக்கது. அன்றியும், ஐந்து ஆறு ஏழாம் பாட்டுக்களில் பேரெயிற்கே’ மூலம் அமைந்திருக்கின்றது. இவ்விடங்களில் பேரையிற்கே’ என்றே பலரும் பதிப்பித்துள்ளார்களானாலும் அது பொருந்துமாவென்று விமர்ச்சிக்கவேணும். பேரை என்று தலத்தின் திருநாமமாய்விட்டால் அதனோடு வேற்றுமை யுருபுசேர்ந்தால் ‘பேரைக்கு என்றாகுமேயல்லது இன்சாரியை வந்து பேரையிற்கு என்றாகாது, ஐகாரவீற்றதான சொல்லின் பக்கத்தில் இன்சாரியை வருவதில்லை. நங்கை + கு நாரைக்கு, வாழை + கு, வாழைக்கு என்றிப்படி வருவதுண்டேயல்லது ‘நங்கையிற்கு நாரையிற்கு வாழை மென்று தோன்றவில்லை,பேரெயிற்கு என்றே ஆழ்வார் திருவாக்கில் திருவவததாக வழங்கி வருமதிலும் குற்றமில்லை. நாங்சுரை நாங்கை யென்றும், தஞ்சாவூரைத் தஞ்சை யென்றும், குடமூக்கூரைக் குடந்தையென்றும், அழுந்தூரை அழுந்தை யென்றும், நெல்வேலியை நெல்லை யென்றும் அயிந்திரபுரத்தை அயிந்தையென்றும் இங்ஙனே ஐகாரவீற்றதாக்கி வழங்கிவரும் முறைமையுண்டாதலா திருப்பேரெயிலுலீரைத் திருப்பேரையென வழங்கிவந்தது ஒக்கும். நூற்றெட்டுதிருப்பதி யந்தாதியிலும் ஈடு முதலிய வியாக்கியானங்களிலும் திருப்பேரை யென்று காண்பதில் குற்றமொன்றும் மில்லாதையினாலே திருத்தம் வேண்டா. திருவாய்மொழி மூலத்தில் மாத்திரம் பாசுரந்தோறும் ‘பேரெயில்’ என்பதே சுத்த பாடம். பேரை யென்றில்லை.

English Translation

O Ladies, how shall I explain this? Alas, you do not see the way my heart sees. My lotus Lord with discus and conch is riding away on his Garuda, he is there is Tirupperyil o joy, where Vedic chants and festival sounds and sounds of Children playing merrily never subside, so thither shall I go

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்