விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் செய்கின்றாய் என் தாமரைக் கண்ணா!   என்னும்*  கண்ணீர்மல்க இருக்கும்,* 
    என் செய்கேன் எறிநீர்த் திருவரங்கத்தாய்?  என்னும்*  வெவ்வுயிர்த்துஉயிர்த்து உருகும்:*
    முன்செய்த வினையே! முகப்படாய் என்னும்*  முகில்வண்ணா! தகுவதோ? என்னும்,* 
    முன்செய்து இவ்உலகம் உண்டுஉமிழ்ந்துஅளந்தாய்!*  என்கொலோமுடிகின்றது இவட்கே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

என் தாமரை கண்ணா - என்னை யீடுபடுத்திக் கொண்ட செந்தாமரைக் கண்ணனே!
என் செய்கின்றாய் என்னும் - என்னை என் செய்வதாக விருக்கிறாய்? என்று சொல்லுகின்றாய்;
கண் நீர் மல்க இருக்கும் - கண்ணீர் ததும்பநின்று ஸ்தப்தையாயிருக்கின்றாள்;
எறி நீர் திரு அரங்கத்தாய் - அலையெறிகின்ற திருக்காவேரி சூழந்த திருவரங்கந்தில் துயில்பவனே!
என் செய்கேன் என்னும் - (உன்னைப் பெறுதற்கு) என்ன செய்வேன்? என்கிறாள்;

விளக்க உரை

கண்ணீர் மல்கவிருக்கும் எங்கும் பக்கநோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே என்னும்படி பிராட்டிமார் திருமுலைத்தடத்தாலே நெருக்கியணைத்தாலும் புரிந்து பாராதே ஏகாக்ரமாக அன்று கடாக்ஷித்தருளின திருக்கண்கள் இன்று எங்கேபோயினவோவென்று உள்குழைந்துருகிக் கண்ணீர் நிரம்பப்பெற்றாள். எறிநீர்த் திருவரங்கத்தாய் என்செய்கேன் என்னும்-என்னுடைய தாபம் தீரும்வழி எனக்கொன்றும் தெரியவில்லையே; இன்னது செய்வதென்று தோன்றவில்லையே; பொன்னி சூழரங்கமேய பூவைவண்ணா! நான் என்ன செய்தால் என் தாபமாறும்? நீயே சொல்லப் என்கிறாள். இங்கே திருவரங்கத்திற்கு ‘எறிநீர்’ என்று விசேஷணமிட்டிருந்தலால் ‘என்னைக் கொண்டுசென்று திருக்காவேரியிலே போடவல்லார் ஆரேனுமுண்டோ!’ என்று அலைபாய்வதாகத் கருத்துத் தோன்றும். திருக்காவேரியிலே கொண்டுவந்து போடுவானேன்? தம் கண்ணெதிரே தாமிரபர்ணி இல்லையோ? அதில் விழலாகாதோவென்று சிலர் கேட்கக்கூடுமே; அதற்கு நம்பிள்ளை யருளிச் செய்கிறார்-“திருப்பொருநலில் நீர், பிரிந்தார்க்கு நிலாப்போலே உபதப்தமாயிரா நின்றதுபோலே.” என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி. தம்முடைய தாபம் தாமிரபர்ணயிலும் எறிப்பாய்ந்து அதிலே அடிவைக்கவும் அணுகவும் போகாமையாலே திருக்காவேரியிலே திருவுள்ளம் சென்றதென்கை. வெவ்வுயிர்த்துயிர்த்து உருகும் - பிரிந்தவர்கள் பூவும் பல்லமுமான செடிகொடி மரங்களை அருகே கண்டால் ஆறியிருக்க மாட்டார்களே; தஹந்தீவமிவ நிச்ச்வாஸை: வ்ருகூஷாந் பல்லவதாரிகை: என்று பிராட்டியானவள் பல்லவந்திகழ் பூஞ்செடிகளைப் பஸீருழுச்சசெறிந்து அழிக்க நினைத்தாப் போலே இப்பாராங்குச நாயகியும் நீள்பொழில்குருகூரை உஷ்ணோஷ்ணமான பெருமூச்செறிதலாலே பங்கம் செய்யப்பார்த்தாள் போலும், உருகும் என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்;- “உருகுகிறபடியே நிற்குமத்தனை; இனி நெடுமுச்செறிகைக்கு தர்மியுமில்லையோ வென்னும்படி யுருகும்; வெவ்விடதாகப் பலகால் நெடுமூச்செறிந்து அவ்வுஷ்ணத்தாலே உருகாநிற்கும்.” முன்செய்தவினையே முகப்டாயென்னும்-எம்பெருமான் என்னை இப்படி உபேக்ஷிக்கும்படி நான் என்ன பாவம் பண்ணிவிட்டேன்? அப்படி நான்செய்த பாவம் ஏதேனுமுண்டாகில் அது என்னெதிரே வந்து நிற்கட்டுமே என்கிறாள். நாம் முன்செய்த முழுவினையால் இழக்கிறோமேயல்லது அவன்மேலே பழிசொல்லிப் பயனென்? என்று திருவுள்ளம் போலும். மமைவ துஷ்க்ருதம் கிஞ்சித் மஹதஸ்தி ந ஸம்சய: என்று பிராட்டி தான் செய்த பாபத்தின் பலனைத் தான் அநுபவிப்பதாகச் சொன்னாளன்றோ.

English Translation

"What are you doing to me, my lotus-Lord?", she asks with tears in her eyes, then, "What shall I do, O Ranga?", she weeps with hot and heavy sighs. "Oh, My Karmas!", she laments, "Come, O Dark Lord, is this proper?" you made the Earth, swallowed it, and brought to out, then measured it. How is it going to end for her?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்