விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கொண்ட மூர்த்தி ஓர் மூவராய்க்*  குணங்கள் படைத்து அளித்து கெடுக்கும்,*  அப் 
    புண்டரீகக் கொப்பூழ்ப்*  புனல் பள்ளி அப்பனுக்கே,* தொண்டர்
    தொண்டர் தொண்டர் தொண்டன்*  சடகோபன் சொல் ஆயிரத்துள் இப்பத்தும்,* 
    கண்டு பாட வல்லார்*  வினை போம் கங்குலும் பகலே. (2)

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

குணங்கள் கொண்ட - ஸத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்களைக் கொண்ட.
மூர்த்தி ஓர் மூவர் ஆய் - மும்மூர்த்திகளுமாய்
படைத்து அளித்து கெடுக்கும் - ஸ்வருஷ்டிஸ்திதிகளுமாய்
அப்புண்டரீகம் கொப்பூழ் - அப்படிப்பட்ட பத்மநாபனாய்
புனல் பள்ளி அப்பனுக்கே- காரண ஜலத்திலே கண்வளர்ந்த பெருமானுக்கு

விளக்க உரை

(கொண்டமூர்த்தி.) இத்திருவாய்மொழியைப் பாடவல்லார்க்கு இந்திரியங்களால் நலிவு படவேண்டிய பாவங்கள் தொலையுமென்று பயனுரைத்துத் தலைக்கள் கட்டுகின்றார். “கொண்டமூர்த்தியோர் மூவராய்க் குணங்கள்” என்றதை “குணங்கள் கொண்டமூர்த்தியோர் மூவராய்” என்று அந்வயித்துக் கொள்வது ஸதர்வம்ரஜஸ் தமஸ் என்கிற மூன்று குணங்களுக்கும் தகுதியாக மூன்று திருக்கோலங்களைப் பரிக்ரஹித்தால் எம்பெருமான். ஸத்வதணங் கொண்ட மூர்த்தி-தானான மூர்த்தி; ரஜோகுணங்கொண்ட மூர்த்தி-பிரமனான மூர்த்தி; தமோகுணங்கொண்ட மூர்த்தி-உரத்திரனான மூர்த்தி. பிரமனுக்கு அந்தர்யாமியாய்ப் படைத்தல் தொழிலைச் செய்தும், ருத்ரனுக்கு அந்தர்யாமியாய் ஸம்ஹாரத் தொழிலைச் செய்தும், தானான தன்மையிலே நின்று காத்தல் தொழிலைச் செய்தும் போருமவன் என்கிறது முதலடி. அப்புண்டரீகக் கொப்பூழ்-எம்பெருமானே முதல்வன் என்பதைக் திருநாபிக் கமலமே மூதலித்துக் கொடுக்கும். இவ்வாழ்வார்தாமே பெரிய திருவந்தாதியில் முதலாந் திருவுருவம் மூன்றென்பர், ஒன்றே முதலாகும் மூன்றும் மென்பர் முதல் வா! நிகரிலகு காருருவா நின்ன்கத்தன்றே புகரிலகு தாமரையின் பூ என்ற பாசுரத்தினால் வெளியிட்டருளின அர்த்தத்தை பட்டர் ஸ்ரீரங்கராஜஸ்வத்திலே 1-116 “த்ரயோ தேவாஸ் துல்யா”: என்கிற ச்லோகத்திலே “விபோர் நாபீபத்மோ விதிசிவநிதாநம் பகவத: ததந்யத் ப்ரூபங்கீபரவதிதி ஸித்தாந்தயதி ந: என்பதனால் விவரித்தருளினார்.

English Translation

This decad of the thousand songs, by the devotee's devotee's devotee Stakopan of Kurugur on the Lord of the three qualities, -of making, keeping and breaking, -will end karmas for those who sing it night and day.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்