விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    என் பரஞ்சுடரே! என்று உன்னை அலற்றி*  உன் இணைத் தாமரைகட்கு,*
    அன்பு உருகி நிற்கும்*  அது நிற்க சுமடு தந்தாய்,* 
    வன் பரங்கள் எடுத்து ஐவர்*  திசை திசை வலித்து எற்றுகின்றனர்:* 
    முன் பரவை கடைந்து*  அமுதம் கொண்ட மூர்த்தி ஓ!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

முன் - முன்பொரு காலத்திலே
பரவை அடைந்து- சுடலைக் கடைந்து
அமுதம் கொண்ட மூர்த்தி - அமுதத்தை யெடுத்து உதவிய ஸ்வாமியே!
என் பரம் சுடரே - எனக்கு விதேயனான பரஞ்சோதியே! என்றிப்படி உன்னை நோக்கிக் கூப்பிட்டு
உன் இணைதாமரை கட்கு - உனது உபய பாதங்கள் விஷயத்திலே

விளக்க உரை

பிரானே! உன் திருவடிகளிலே அடிமை செய்கைக்கு இடையூறாய் விஷயாநுபவங்களுக்குப் பாங்கான உடம்பை எனக்குத் தந்தாய்; அதுவே ஹேதுவாகப் பஞ்சேந்திரியங்களும் பெறுக்கவொண்ணாத ஹிம்ஸைகளைச் செய்கின்றன; அவற்றைப் பரிஹரித்தருளவேணும் என்று ஆர்த்தியோடே பெருமிடறு செய்து கூப்பிடுகிறார். முதலில் என்பரஞ் சுடரே!’ என்று ஒருவிளி யிருப்பது அதுபோன்ற பல்லாயிரம் விநிகளுக்கு உபலக்ஷ்ணம்; “ஸ்ரீநாத நாராயண் வாஸூதேவ ஸ்ரீக்ருஷ்ண பக்த ப்ரிய சக்ரபாணே, ஸ்ரீபத்மநாபாச்யுத கைடபாரே ஸ்ரீராம பத்மாக்ஷ் ஹரே முராரே!; அநந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண கோலிந்த தாமோதர மாதவஞ்.” என்றிப்படி ஒய்வின்றி எம்பெருமானது திருநாமங்களையே சொல்லிச் சொல்லிப் போது போக்குவதென்று ஒன்றண்டே; அதுதான் இங்கு முதலடியில் விவக்ஷிதம்; என்பரஞ்சுடரே! என்றாற்போலே பலபல திருநாமங்களை வாயாரச் சொல்லியலற்றி என்பரஞ்சுடரே! என்றாற்போலே பலபல திருநாமங்களை வாயாரச் சொல்லியலற்றி நீராயுருகி நிற்கையன்றோ என் ஸ்வரூபத்திற்குச் சேருவது; பிரானே! அந்த நிலைமை யிலன்றோ என்னை நீ நிறுத்த வேண்டும்; அஃதொழிய அதற்கு எதிரான நிலையிலே வைத்திருக்கின்றாயே; அதாவது விஷயாநுபவங்களுக்கு உபகாணமான ப்ரக்ருதியைக் தந்துவைத்திருக்கிறாயே! என்கிறார் முன்னடிகளில். சுமடு-இந்திரியங்கள் சமத்தின் சுமையையெல்லாம் சுமக்கைக்கீடான சரீரமாகிற சும்மாடு என்றபடி.

English Translation

O Lord you churned the ocean and gave ambrosia to the gods, I wish to sing your glory and melt with love over your lotus-feet. Instead you made me carry this log and heave a burden. These five drag me into stormy directions, and beat me painfully, Oh!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்