விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    குலம் முதல் அடும் தீவினைக்*  கொடு வன் குழியினில் வீழ்க்கும் ஐவரை* 
    வலம் முதல் கெடுக்கும்*  வரமே தந்தருள்கண்டாய்,* 
    நிலம் முதல் இனி எவ் உலகுக்கும்*  நிற்பன செல்வன எனப்,*  பொருள்- 
    பல முதல் படைத்தாய்!*  என் கண்ணா! என் பரஞ்சுடரே!            

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

நிலம் முதல் - பூமி முதலாக
இனி எவ்வுலகுக்கும் - மற்றும் ஸகல லோகங்களுக்கும்
நிற்பன செல்வன என- ஸ்தாவர ஜங்கம ரூபமான
பொருள் பல- பொருள்கள் பல வற்றையும்
முதல் படைத்தாய் - முன்னம் படைத்தவனே!
என் கண்ணா- என் கண்ணனே!

விளக்க உரை

விஷயங்களிலே ஆத்மாவைத் தள்ளும் இந்திரியங்கள் என்னை நலியாத படி பண்ணவேணும் என்று இரக்கிறார். குலமுதடுந்தீவனை-ஒருவன் பண்ணின பாபம் அவனொருவனோடே போகையல்லாமல் குலமாக முடிக்க வல்லவையான பாவங்களை விளைக்க கூடியதாய். கொடியதாய், அநுபவித்து முடியவொண்ணாதபடியாயிருக்கிற குழியிலேதள்ளி ஹிம்ஸிக்கின்றவர்களாம் ஐவர்; அவர்கள் தாம் பஞ்சேந்திரியங்களென்று பேர்பெற்ற மஹாநுபாவர்கள். அந்தப் பெருமிடுக்காளருடைய மிடுக்கை முதலிலே முடிக்கக் கடவதான உன்னுடைய அநுக்ரஹத்தைப் பண்ணியருள வேணுமென்கிறராயிற்று முன்னடிகளில். இங்குக் குழியென்றது சப்தாதி விஷயங்களை. இவ்விடத்து ஈடுமுப்பத்தாறாயிரத்திலும் இருப்பத்துநாலாயிரத்திலும்-“ நஹி தர்ம விருத்தேஷூ பஹ்வபாயேஷூ கர்மஸூ , மூலகாதிஷூ ஸஜ்ஜந்தே புத்தி மந்தோ பவத்விதா: என்றானிறே மால்யவானுடையதாக ஸ்ரீராமாயணத்தில் இப்போதுள்ள பதிப்பு ஒன்றிலும் காணப்படவில்லை; திருவடியின் வார்த்தையாகக் காணகிறது. ஆகவே இங்கு நேர்ந்திருக்கும் பிறழ்வு குறிக்கொள்ளத் தக்கது.

English Translation

These five senses can fell even the gods into the shin-pit, My Krishna, my radiant effulgence, you made this Earth, and all the worlds, the standing, the moving, and the things, Grant to destruction of the five, their strength and all, heed me

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்