விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத*  ஓர் ஐவர் வன் கயவரை,* 
    என்று யான் வெல்கிற்பன்*  உன் திருவருள் இல்லையேல்?,* 
    அன்று தேவர் அசுரர் வாங்க*  அலைகடல் அரவம் அளாவி,*  ஓர் 
    குன்றம் வைத்த எந்தாய்!*  கொடியேன் பருகு இன் அமுதே!     

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தேவர் அசுரர் - தேவர்களும் அசுரர்களும்
வாங்க - வலிக்கும்படியாக
அலைகடல் - அலையெறிகிற கடலிலே
அரவம் அளாவி -வாஸூதி யென்கிற பாம்பைச் சுற்றி
ஓர் குன்றம் - மந்தர மலையை

விளக்க உரை

ஒன்று சொல்லி) அடியார்கட்கு அருந்தொழில் செய்தும் அபேக்ஷிதம் தலைக்கட்டுவதையே இயல்வாக வுடையனான உன்னுடைய கருணையில்லாயாகில் பிரபரமான இந்திரியங்களை நான் வெல்லுவதென்றொரு பொருளுண்டோ வென்கிறார். ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத-ஒரு விஷயத்திலே சாபலத்தைப் பண்ணி அது கை புகும்வரையில் அதிலே நிலைநில்லாத என்றபடி. ஒருத்து—ஒருமைப்பாடு. இன்-சாரியை; இல்-ஏழனுருபு. கயவர்-கொடியர். “ஒர் அர்த்தத்திலே நிற்கக் கடவதல்லாத” என்று ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்கையாலே அதறகீடாக “ஓரத்தனில்” என்று பாடமிருக்கலாம் என்றார் ஒரு பெரியயார். அர்த்தம் என்பது ‘அத்தன்’ என்று திரியலாம்; மகரனகரப்போலி. ஆனாலும் “ஒருத்து-ஒருமைப்பாடு” என்று வியாக்கியானங்கள் காண்கையாலே பாடத்திருத்தம் வேண்டாவென்க.

English Translation

These fickle senses cannot stick to one path or goal. My sweet ambrosial Lord, you churned the ocean with gods and the Asuras, with a snake rolled around a mountain planted in the deep. Alas, how will ever control my senses if your grace is not forthcoming?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்