விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்தாய் போலே வாராதாய்!*  வாராதாய் போல் வருவானே,*
    செந்தாமரைக் கண் செங்கனிவாய்*  நால் தோள் அமுதே! எனது உயிரே,* 
    சிந்தாமணிகள் பகர் அல்லைப் பகல்செய்*  திருவேங்கடத்தானே,* 
    அந்தோ அடியேன் உன பாதம்*  அகலகில்லேன் இறையுமே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

வந்தாய் போலே வாராதாய் - கைக்கு எட்டினாற்போலேயிருந்து எட்டாதவனே!
வாராதாய் போல் வருவானே - எட்டாதவன் போலிருந்து எட்டி நிற்பவனே!
செம் தாமரை கண் - செந்தாமரைபோன்ற திருக்கண்களையும்
செம் கனி வாய் - செங்கனி போன்ற திருப்பவளத்தையும்
நால் தோள் - நான்கு திருத்தோள்களையுமுடைய

விளக்க உரை

வந்தவனைப் போன்றிருந்து வாராமல் இருப்பவனே! வாராதவனைப் போன்றிருந்து வருகின்றவனே! செய்தாமரைமலர் போன்ற திருக்கண்களையும் சிவந்த கோவைக்கனிபோன்ற திருவாயினையும் நான்கு திருத்தோள்களையுமுடைய அமுதம் போன்றவனே! என் உயிரானவனே! சிந்தாமணி என்னும் இரத்தினங்களின் ஒளியானது இருட்டினை நீக்கிப் பகலாகச் செய்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! ஐயோ! அடியேன் உன்னுடைய திருவடிகளைச் சிறிது பொழுதும் நீங்கமாட்டுகின்றிலேன்.

English Translation

You never come when you seem to, and come when you only seem to. My soul's ambrosia! My Lord with lotus eyes, coral lips and four arms! O Lord of Venkatam, where brilliant gems turn night into day! Alas, I cannot bear the separation from your feet even for a moment!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்