விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    புணரா நின்ற மரம் ஏழ்*  அன்று எய்த ஒரு வில் வலவா ஓ,* 
    புணர் ஏய் நின்ற மரம் இரண்டின்*  நடுவே போன முதல்வா ஓ,*
    திணர் ஆர் மேகம் எனக் களிறு சேரும்*  திருவேங்கடத்தானே,* 
    திணர் ஆர் சார்ங்கத்து உன பாதம்*  சேர்வது அடியேன் எந்நாளே?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அன்று - ராமாவதாரத்திலே
புணரா நின்ற மரம் ஏழ் - ஒன்றொடொன்று பிணைந்திருந்த ஸப்த ஸாலவ்ருக்ஷங்களை
எய்த - துளைபடுத்தின
ஒரு வில் வலவா ஓ - ஓ தனிவீரனே!
புணர் எய் நின்ற மர ம் இரண்டின் நடுவே - சேர்ந்தி பொருத்தி நின்ற இரட்டை மருத மரங்களினிடையே

விளக்க உரை

சேர்ந்து ஒன்றுபட்டிருந்த மராமரங்ள் ஏழனையும் சுக்கிரீவன் நிமித்தமாக அம்பு எய்த ஒப்பற் வில்வலவனே! சேர்ந்து பொருந்தி இருந்த இரண்டு மரங்களின் நடுவே சென்ற முதல்வனே! திண்மைபொருந்திய மேகமோ என்று ஐயப்படும்படியாக யானைகள் வந்து சேர்கின்ற திருவேங்கடத்தில் எழுந்தருளியிருக்கின்றவனே! திண்மை பொருந்திய கோதண்டத்தையுடைய உனது திருவடிகளை அடியேன் சேர்வது எந்த நாளோ?

English Translation

O Deft archer who pierced an arrow through seven trees! O First-Lord who went between the two Marudu trees! O Lord of Venkatam where elephants resemble dark clouds! O Wielder a the heavy sarngo-bow, when will I reach your feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்