விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    தெரிதல் நினைதல்*  எண்ணல் ஆகாத் திருமாலுக்கு,* 
    உரிய தொண்டர் தொண்டர்*  தொண்டன் சடகோபன்,* 
    தெரியச் சொன்ன*  ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்* 
    உரிய தொண்டர் ஆக்கும்*  உலகம் உண்டாற்கே.       

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

தொண்டர் தொண்டர் - பக்த பக்தர்களுக்கு
தொண்டன் - பக்தரான
சடகோபன் - நம்மாழ்வார்
தெரிய சொன்ன - விசதமாக அருளிச்செய்த
ஓர் ஆயிரத்துள் - விலக்ஷணமான ஆயிரத்தினுள்ளே

விளக்க உரை

தெளிதல் நினைத்தல் தியானித்தல் ஆகிய இவற்றால் அறியமுடியாத திருமாலுக்கு உரிமைப்பட்ட தொண்டர்களுக்குத் தொண்டரான ஸ்ரீ சடகோபராலே தெளியும்படியாகச் சொல்லப்பட்ட ஒப்பற்ற ஆயிரம் திருப்பாசுரங்களுள் இந்தப் பத்துத் திருப்பாசுரங்களும் உலகத்தையெல்லாம் உண்டவனான சர்வேசுவரனுக்கு உரிமைப்பட்ட தொண்டராகச் செய்யும்.

English Translation

This decad of the thousand revelations of devotee's devotees' devotee Satakopan on the Lord beyond sight, though and feeling will secure the feet of the Lord who swallowed the Earth.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்