விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    அறிவிலேனுக்கு அருளாய்*  அறிவார் உயிர் ஆனாய்,* 
    வெறி கொள் சோதி மூர்த்தி!*  அடியேன் நெடுமாலே,* 
    கிறிசெய்து என்னைப் புறத்திட்டு*  இன்னம் கெடுப்பாயோ,* 
    பிறிது ஒன்று அறியா அடியேன்*  ஆவி திகைக்கவே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அறிவார் உயிர் ஆனாய் - ஞானிகளை ஆத்மாவாக வுடையவனே!
வெறி கொள் சோதி மூர்த்தி - ஸுகந்தமயமாய் தேஜோமயமாயிருந்துள்ள திவ்யமங்கள விக்ரஹத்தையுடையவனே!
அடியேன் நெடுமாலே - அடியேனிடத்தில் அளவுகடந்த வியாமோஹமுடையவனே!
அறிவு இலேனுக்கு அருளாய் - அறிவிலியான என் விஷயத்திலே அருள் செய்ய வேணும்.
பிறிது ஒன்று அறியா அடியேன் ஆவி திகைக்க - வேறொரு புகலறியாத அடியேனுடைய நெஞ்சு கலங்கும்படியாக

விளக்க உரை

ஞானிகளுக்கு உயிராக இருப்பவனே! வாசனையைக் கொண்டிருக்கிற ஒளிபொருந்திய விக்கிரஹத்தையுடையவனே! அடியேனுடைய நெடிய மாலே! விரகு அறியாத எனக்குக் கிருபைசெய்தருள்வாய்; வேறு ஒன்றனையும் அறியாத அடியேனுடைய உயிரானது திகைக்கும்படியாக வேறு உபாயங்களைச்செய்து என்னைப் புறத்திலே தள்ளி இன்னம் கெடுப்பாயோ? என்கிறார்.

English Translation

O Soul of the mortals, pray grace this ignorant self. My fragrant icon-Lord of infinite radiance! Will you still keep away and kill me with your tricks? Alas, knowing nothing else. My soul is afflicted!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்