விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    விண்மீது இருப்பாய்! மலைமேல் நிற்பாய்!*  கடல் சேர்ப்பாய்,* 
    மண்மீது உழல்வாய்!*  இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்,* 
    எண்மீது இயன்ற புற அண்டத்தாய்!*  எனது ஆவி,* 
    உண் மீது ஆடி*  உருக் காட்டாதே ஒளிப்பாயோ?    

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

விண் மீது இருப்பாய் - பரமபதத்தில் வீற்றிருப்பவனே!
மலை மேல் நிற்பாய் - (அர்ச்சாரூபியாய்) திருமலையிலே நிற்குமவனே!
கடல் சேர்ப்பாய் - திருப்பாற்கடலிலே கண் வளர்ந்தருளுமவனே!
மண் மீது உழல்வாய் - (ராமக்ருஷ்ணாதி விபவரூபத்தாலே அவதரித்து) பூமியின்மேல் ஸஞ்சரிப்பவனே!
இவற்றுள் எங்கும் மறைந்து உறைவாய்  - இந்த ஜகத்தில் ஸகலபதார்த்தங்களிலும் அந்தர்யாமியாய் மறைந்து வர்த்திப்பவனே

விளக்க உரை

பரமபதத்தில் வீற்றிருக்கின்றவனே! திருமலைமேல் நிற்கின்றவனே! திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கின்றவனே! பூவுலகத்தில் பல அவதாரங்களைச் செய்கின்றவனே! இந்தப் பொருள்கள் எல்லாவற்றினுள்ளும் மறைந்து வசிக்கின்றவனே! எண்ணுக்கும் அப்பாற்பட்ட புறத்தேயுள்ள அண்டங்களிலும் இருக்கின்றவனே! என்னுடைய உயிருக்குள் அதிகமாக நடையாடிவிட்டு கண்களுக்கு இலக்கு ஆகாமல் மறையக் கடவையோ?

English Translation

O Lord you sit in the sky, stand on the hill, sleep in the ocean, walk on the plains. You are present in all these, hidden, O Lord existing in countless other worlds as well, Blended in me, will you still hide yourself from me?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்