விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    ஞாலத்தூடே நடந்தும் நின்றும்*  கிடந்து இருந்தும்,* 
    சாலப் பலநாள்*  உகம்தோறு உயிர்கள் காப்பானே,* 
    கோலத் திரு மா மகளோடு*  உன்னைக் கூடாதே,* 
    சாலப் பல நாள்*  அடியேன் இன்னும் தளர்வேனோ?   

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உகம் தோறு - ஒவ்வொரு யுகத்திலும்
ஞாலத்தூடே - பூமியிலே அவதரித்து
நடத்தும் நின்றும் கிடந்து இருந்தும் - நடப்பது நிற்பது கிடப்பது இருப்பதான செயல்களைச் செய்து
சால பல நாள் - பல்லாயிரமாண்டளவும்
உயிர்கள் காப்பானே - பிராணிகளை ரக்ஷித்தருள்பவனே!

விளக்க உரை

யுகங்கள்தோறும் பூலோகத்திலே நடந்தும் நின்றும் கிடந்தும் இருந்தும் மிகப் பலநாட்களாக உயிர்களைப் காப்பாற்றுகின்றவனே! அழகிய பிராட்டியாரோடு சேர்ந்திருக்கின்ற உன்னை அடியேன் அடையாமல் மிகப் பலநாள் இன்னம் தளர்வேனோ?

English Translation

O Lord who protects all through every age, we see you walking, standing, sitting and lying. O Lord with beautiful lotus-dame Lakshmi, how many days must I live in seperation?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்