விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    வந்திருந்து உம்முடைய*  மணிச் சேவலும் நீரும் எல்லாம்,* 
    அந்தரம் ஒன்றும் இன்றி*  அலர்மேல் அசையும் அன்னங்காள்,* 
    என் திரு மார்வற்கு என்னை*  இன்னவாறு இவள் காண்மின் என்று,* 
    மந்திரத்து ஒன்று உணர்த்தி உரையீர்*  மறுமாற்றங்களே.

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

அந்தரம் ஒன்றும் இன்றி - இடையீறு ஒன்றுமில்லாமல்
அலர்மேல் அசையும்- பூக்களின் மீது உல்லாஸமாக உலாவுகிற
அன்னங்காள் -அன்னப்பறவைகளே!
என் திருமார்வற்கு -லஷ்மீபதியான எமபெருமானுக்கு
என்னை - என்னைப்பற்றி ப்ரஸ்தாவித்து

விளக்க உரை

உம்முடைய அழகிய சேவலும் பெண்ணாகிய நீரும் உம்முடைய உறவு முறையினரும் எல்லாரும்கூட இடையூறு சிறிதும் இல்லாமல் பூவின்மேலே தங்கியிருக்கின்ற அன்னங்காள்! இங்கே வந்திருந்து என்னுடைய திருவை மார்பிலேயுடைய எம்பெருமானுக்கு என்னை இவள் இன்னவாறு ஆனாள் என்று தனி இடத்தில் ஒருவார்த்தை அறிவித்து அவர் கூறும் மறுமாற்றங்களை எனக்குச் சொல்லுங்கோள்.

English Translation

O Beautiful swans, nestling amid lotus flowers in the water, -you, your bright spouses and all your kin, -go see my Lakshmi-chested Lord in his chambers and tell him, "This maiden is this and this", then come back and tell me what he says.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்